டிச.20 முதல் க்வாட்எச்டி டிஸ்பிளே; டூயல் கேம் கொண்ட எல்ஜி வி30ப்ளஸ்.!

Written By:

டிசம்பர் 13-ம் தேதி இந்தியாவின் புதிய அதிவேக சாதனமாக வி30+ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்படும் என்று எல்ஜி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வானது, புது டெல்லியில் நடைபெறுகிறது காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

டிச.20 முதல் க்வாட்எச்டி டிஸ்பிளே; டூயல் கேம் கொண்ட எல்ஜி வி30ப்ளஸ்.!

நினைவுகூர வேண்டுமென்றால், இந்த ஸ்மார்ட்போன் ஐஎப்ஏ 2017 நிகழ்வில் வி30 ஸ்மார்ட்போனுடன் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு சாதனங்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு சேமிப்பகத்தில்உள்ளது. எல்ஜி வி30 ஆனது ஒரு 64ஜிபி சேமிப்பிடம் கொண்டது, அதே நேரத்தில் வி30ப்ளஸ் ஆனது 128ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ளது. இது தவிர, இரண்டு கருவிகளின் அம்சங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

டிச.20 முதல் க்வாட்எச்டி டிஸ்பிளே; டூயல் கேம் கொண்ட எல்ஜி வி30ப்ளஸ்.!

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக, அதன் இரட்டை கேமரா அமைப்பு திகழ்கிறது. இக்கருவி எப் / 1.6, ஓஐஎஸ், இஐஎஸ் மற்றும் லேசர் டிடக்சன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் ஃபேஸ் டிடெக்டிவ் ஆட்டோ ஃபோகஸ் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்த ஹைபிரிட் ஆட்டோஃபோகஸ் ஆகிய அம்சங்கள் கொண்ட 16எம்பி முதன்மை கேமரா மற்றும் எப்/ 1.9 மற்றும் ஒரு 120 டிகிரி வியூ லென்ஸ் கொண்ட 13எம்பி இரண்டாம் நிலை கேமரா கொண்டுள்ளது.

டிச.20 முதல் க்வாட்எச்டி டிஸ்பிளே; டூயல் கேம் கொண்ட எல்ஜி வி30ப்ளஸ்.!

எல்ஜி வி30+ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

சிப்செட்: க்வால்காம் ஸ்னாப்ரான் 835 மொபைல் பிளாட்பார்ம்
டிஸ்பிளே: 6.0-அங்குல 18: 9 க்வாட்எச்டி + ஓ எல்இடி முழு டிஸ்பிளே (2880 x 1440 / 538பிபிஐ)
நினைவகம்: 4ஜிபி / 128ஜிபி / மைக்ரோ எஸ்டி (2டிபி வரை)
பேட்டரி: 3300 எம்ஏஎச்
ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்
அளவு: 151.7 x 75.4 x 7.3 மிமீ
எடை: 158 கிராம்
நெட்வொர்க்: எல்டிஇ-ஏ 4 பேண்ட் சிஏ
இணைப்பு ஆதரவுகள்: வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி
நிறங்கள்: அரோரா பிளாக் / கிளவுட் சில்வர் / மொராக்கோ ப்ளூ / லேவண்டர் வயலட்English summary
LG V30+ with 6.0-inch Quad HD+ display to launch in India on December 13. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot