எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
எல்ஜி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி எல்ஜி வி30 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.11,000-வரை அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்
மாடலை அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.40,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.11,000 விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு மூன்று கேமரா வசதியுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜனவரி 19-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்விஷன் டிஸ்பிளே:
எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் க்யுஎச்டி பிளஸ் புல்விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
அதன்பின் (1440-2880)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு :
எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம்;
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி +13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 71 டிகிரி வைடு ஆங்கில் லென்ஸ் இடம்பெற்றுள்ளது மற்றும் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








