எல்ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000-வரை அதிரடி விலைகுறைப்பு.!
இந்த எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி +13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 71 டிகிரி வைடு ஆங்கில் லென்ஸ் இடம்பெற்றுள்ளது மற்றும் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
எல்ஜி நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புதிய ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, இந்த அட்டகாசமான சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விலைகுறைக்கப்பட்ட எல்ஜி ஸ்மர்ரட்போன்கள் பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் முதலில் ரூ.44,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.20,999-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டு ரூ.23, 999-விலையில் விற்பனை
செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
இதேபோன்று எல்ஜி ஜி7 திங்க் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.39,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

எல்ஜி வி30 பிளஸ் டிஸ்பிளே:
எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் க்யுஎச்டி பிளஸ் புல்விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
அதன்பின் (1440-2880)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

எல்ஜி வி30 பிளஸ் கேமரா:
இந்த எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி +13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 71 டிகிரி வைடு ஆங்கில் லென்ஸ் இடம்பெற்றுள்ளது மற்றும் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க
மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வைபை, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி7 தின்க் :
எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.1-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3120 - 1440 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலுமட ஜி7 தின்க் சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ்5 பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம்
ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசிதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கிரே, அரோரா பிளாக், மொராக்கன் புளு, ரேஸ்ப்பெரி ரோஸ் போன்ற நிறங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

எல்ஜி ஜி7 தின்க் கேமரா:
இந்த எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் 16எம்பி + 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக
ஜி7 தின்க் சாதனத்திற்கு IP68 சான்று வழங்கப்பட்டுள்ளது, இதனால் ஸ்மார்ட்போனிற்கு தூசு மற்றும் தண்ணீர் மூலம் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications