Home
Mobile

இந்தியா : டூயல் கேமராவுடன் அசத்தலான எல்ஜி வி30 பிளஸ் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறது எல்ஜி நிறுவனம், அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 புல்விஷன் டிஸ்பிளே:

புல்விஷன் டிஸ்பிளே:

எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் க்யுஎச்டி பிளஸ் புல்விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-2880)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.2 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம்;

4ஜிபி ரேம்;

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 71 டிகிரி வைடு ஆங்கில் லென்ஸ் இடம்பெற்றுள்ளது மற்றும் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3300எம்ஏஎச்:

3300எம்ஏஎச்:

எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

 விலை:

விலை:

எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.56.600-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
LG V30 India Launch Set for Today, Sports 6 Inch FullVision Display and Dual Rear Cameras ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X