Home
Mobile

புதிய தொழில் நுட்பங்களுடன் வரும் எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன்

By Karthikeyan
புதிய தொழில் நுட்பங்களுடன் வரும் எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன்

எல்ஜி நிறுவனம் தனது எல் வரிசை சாதனங்களில் மேலும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த புதிய போனிற்கு ஆப்டிமஸ் எல்9 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் அட்டகாசமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக இந்த போன் டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இதன் இயங்கு வேகம் மிக அபாரமாக இருக்கும். இதன் 4.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே மிகத் தெளிவாக இருக்கும். அதோடு இதன் 5எம்பி கேமரா மிகத் துல்லியமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும்.

மேலும் இந்த போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குவதால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெறும் என்று நம்பலாம். இந்த ஆப்டிமஸ் போன் எல்ஜியின் ஆப்டிமஸ் யுஐ 3.0 தொழில் நுட்பம், க்யுட்ரான்ஸ்லேட்டர் அப்ளிகேசன் மற்றும் ஆப்டிக்கல் கேரக்டர் ரெகக்னிசன் போன்ற தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரு வாக்கியத்தை 64 மொழிகளில் ஸ்கேன் செய்ய முடியும்.

இந்த ஆப்டிமஸ் போனில் மை ஸ்டைல் கீபேட் என்று அழைக்கப்படுகின்ற ஒரு அடாப்டிவ் கீபோர்டும் உள்ளது. இந்த போனின் விலையை எல்ஜி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இதன் விலை ரூ.20,000க்குள் இருக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X