Home
Mobile

ஜூன் 26 -இந்தியா வரும் எல்ஜி W10: என்னென்ன சிறப்பம்சம் தெரியுமா?

எல்ஜி நிறுவனம் வரும் ஜூன் 26-ம் தேதி எல்ஜி W10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது

வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது

குறிப்பாக வரும் ஜூன் 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மூன்று ரியர் கேமரா கொண்ட எல்ஜி W10 அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மற்ற ஸ்மார்ட்போன்களை விட இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அசத்தலான டிஸ்பிளே:

எல்ஜி W10 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் டிஸ்பிளே வடிவடிமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எல்ஜி W10 சேமிப்பு:

எல்ஜி W10 சேமிப்பு:

எல்ஜி W10 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 3ஜபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால்
பயன்படுத்த அருமையாக இருக்கும்.

அட்டகசமான ரியர் கேமரா:

அட்டகசமான ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு புதிய வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வைட்-ஆங்கிள் கேமரா, டெப்த் சென்சார் என்ற வகையான கேமராக்கள் இதில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குவால்காம்-ஸ்னாப்டிராகன் :

குவால்காம்-ஸ்னாப்டிராகன் :

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் வேகமாக செயல்படும்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

இந்த ஸ்மாரட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
LG To Announce The LG W10 In India On June 26 In New Delhi : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X