சோஷியல் நெட்வொர்க்கிங் வசதியை வழங்கும் எல்ஜி மொபைல்!

நிறுவனம். பட்ஜெட் மொபைல் என்றாலும் இதன் வசதிகளை படிக்கும் போதே, இந்த மொபைல் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டது என்று நிச்சயம் புரியும்.
இந்த மொபைல் கியூவிஜிஏ தொழில் நுட்பம் கொண்டது. இதன் திரை 2.8 இஞ்ச் திரையை வழங்கும். இந்த திரையின் மூலம் 240 X 320 திரை துல்லியத்தினை கொடுக்கும். இதன் கேமரா அற்புதமான கேமரா வசதியினையும் வழங்கும்.
டி-565 மொபைலில் 3 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் சூம் தொழில் நுட்பத்தினையும் பெற முடியும்.
சோஷியல் மீடியா நெட்வொர்க்கிங் வசதி என்பது அனைவருக்கும் இன்று உயிர் நாடியாக இருப்பதால் மொபைலில் பிரவுசிங் வசதியை எல்லோரும் எதிர் பார்க்கின்றனர். டி-565 மொபைலில் நிச்சயம் சிறப்பான பிரவுசிங் வசதியை பெறலாம்.
256எம்பி வரை இதில் இன்டர்னல் வசதியை பெற முடியும். 8ஜிபி வரை இதன் மெமரி வசதியை விரிவுபடுத்தி கொள்ள இதில் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் துணை புரிகிறது. இன்னும் பல இதர வசதிகளான வைபை, புளூடூத், யூஎஸ்பி போன்றவற்றையும் இதில் எளிதாக பெறலாம்.
இத்தனை சவுகரியங்களையும் வழங்கும் இந்த மொபைலின் விலை ரூ.5,000 ஒட்டிய விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த குறைந்த விலையில் வைபை வசதியையும் கொடுக்கும் இந்த மொபைல் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications