எல்ஜி டி 515 டூவல் சிம் மொபைல் - எல்ஜி அறிவிப்பு

Posted By: Staff

எல்ஜி டி 515 டூவல் சிம் மொபைல் - எல்ஜி அறிவிப்பு
எல்ஜி என்றாலே அந்நிறுவனத்தின் தரமான பொருள்கள் நம் ஞாபகத்திற்கு வரும். அதே நேரத்தில் அவர்கள் வழங்கும் அத்தனை மொபைல்களும் அட்டகாசமான செயல்திறன் கொண்டவை. அவர்களின் புதிய வரவான எல்ஜி டி-515 டூவல் சிம் மொபைல் அவர்களின் கடின உழைப்பிற்கு மணி மகுடமாக இருக்கும் என நம்பலாம்.

எல்ஜி டி-515 டூவல் சிம் மொபைலின் சிறப்புகளை நாம் பார்த்தால் முதலில் அது டூவல் பேண்ட் ஜிஎஸ்எம் 900/ 1800 எம்ஹச்ஸட் சப்போர்ட்டை பெற்றிருக்கிறது. மேலும் அப்டேட் செய்யப்பட்ட ஜிபிஆர்எஸ்/டபுள்யுபி சேவையையும் வழங்குகிறது. இதன் திரை 3.2 இஞ்ச் அளவில் க்யுவிஜிஎ டிஎப்டி 262 வண்ணங்கள் கொண்டதாகும்.

மேலும் இதன் 240 X 320 பிக்ஸல் ரிசலூசன் தெளிவான வீடியோவை வழங்குகிறது. இது ரிக்கார்ட் செய்யும் வசதி கொண்ட எப்எம் ரேடியோவை வழங்குவதால் அனைவரும் இதை வாஙகுவர் என நம்பலாம். மேலும் இந்த மொபைல் 2 மெகா பிக்ஸல் ரியர் கேமராவை பெற்றிருக்கிறது. இதன் முகப்பு கேமரா மூலம் எளிதாக வீடியோ கால் செய்ய முடியும். இதன் இன்டர்னல் சேமிப்பு 4 ஜிபி ஆகும். மேலும் இதை 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

இதன் மியூசிக் ப்ளேயர் மூலம் தரமான மியூசிக் பைல்களை இயக்க முடியும். இதன் ஆடியோ பைல்கள் எம்பி3, எஎசி, எஎம்ஆர், டபுள்யுஎவி மற்றும் எம்ஐடி போன்ற பார்மட்டுகளையும் சப்போர்ட் செய்கிறது. இதன் வீடியோ ப்ளேயர் 9ஜிபி மற்றும் எம்பி4 வீடியோக்களையும் இயக்கும் சக்தி வாய்ந்தவை.

ஆனால் எல்ஜி டி-515 டூவல் சிம் மொபைல் வைஃபை வசதி கொண்டிருக்கவில்லை. ஆனால் இது இடிஆருடன் ப்ளுடூத் வி2.1 பெற்றுள்ளது. மேலும் இந்த மொபைல் பாலிமோனிக் மற்றும் எம்பி3 ரிங்டோன்களை சப்போர்ட் செய்யும் வசதியும் பெற்றிருக்கிறது.

மின் திறனுக்காக இது 900எம்எஹச் எல்ஐ ஐஒஎம் பேட்டரி பெற்றுள்ளதால் எவ்வளவு நேரம் பேசினாலும் இதன் பேட்டரி பேக்கப் குறைவதில்லை.மேலும் இதன் எடை 105 கிராம் மட்டுமே. அதனால் இதை எடுத்தச் செல்வது மிகவும் எளிது. இன்னும் இதன் விலை அறிவிக்கப்படவில்லை. ஆனால் இது வாடிக்கையாளர்களை கண்டிப்பாக கவரும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot