Home
Mobile

"நோக்கியா பாணியில்" எல்ஜி ஸ்டைலஸ் 3 (விலை, அம்சங்கள்) அறிமுகம்.!

மிக காலம் கழித்து எழுத்தாணி (ஸ்டைலஸ்) உடன் ஒரு கருவி.!

By Muthuraj

எந்த விதமான ஆடம்பர நிகழ்வும் இன்றி நோக்கியா நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு கருவிகளை அறிமுகம் செய்த பாணியில் எல்ஜி நிறுவனம் மிகவும் அமைதியாக அதன் ஸ்டைலஸ் 3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.18,500/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள எல்ஜி ஸ்டைலஸ் 3 தற்போது நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் வரும் நாட்களில் விற்பனை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஜி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஸ்டைலஸ் 3 கருவியின் குறிப்பிடப்பட்டுள்ளவிலையில் இருந்துசற்று குறைவான விலைக்கு தான் சந்தையில் அறிமுகம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டைலஸ்

ஸ்டைலஸ்

கடந்த டிசம்பர் மாதம் சிஇஎஸ் 2017 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவியில் எழுத்தாணி (stylus) என்பது ஒரு பெரிய அம்சமாக உள்ளது. அது உங்கள் செயல்பாடுகளை எளிமையாக்க உதவும் உடன் ஒரு படத்தை எடிட் செய்ய அற்புதமாக பயன்படும் மற்றும் பல கோணங்களை ஸ்டைலஸ் மூலம் அணுகலாம்.

ஸ்க்ரீன் ஆஃப் மெமோ அம்சம்

ஸ்க்ரீன் ஆஃப் மெமோ அம்சம்

எல்ஜி ஸ்டைலஸ் 3 ஆனது எழுத்தாணி உதவியுடன் ஸ்க்ரீன் ஆஃப் செய்ய உதவும் ஸ்க்ரீன் ஆஃப் மெமோ அம்சம் கொண்டு வருகிறது. மற்றும் பென் கீப்பர் அம்சமும் கொண்டுள்ளது உடன் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர், டச் ஷட்டர் மற்றும் டச் ஸ்க்ரீன் ஆகிய அம்சங்களும் அடக்கம்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

எல்ஜி ஸ்டைலஸ் 3 கருவியானது 258பிபிஐ என்ற ஒரு பிக்சல் அடர்த்தி கொண்ட 5.7 அங்குல எச்டி (720x1280 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 1.5ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட ஒரு ஆக்டா-கோர் மீடியா டெக் எம்டி 6750 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

சேமிப்பு

சேமிப்பு

உடன் இக்கருவி எல்பிடிடிஆர்3 ரேம் அடிப்படையிலான 3ஜிபி மற்றும் 16ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு கொண்டு மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை நீட்டிப்பு ஆதரவும் அளிக்கிறது.

கேமரா

கேமரா

ஒரு 13 மெகாபிக்சல் பின்புற சிஎம்ஓஎஸ் ஆட்டோ ஃபோகஸ் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது மற்றும் இரண்டு கேமராக்களுமே எல்இடி ப்ளாஷ் கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

ஒரு 3200எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி ஆதரவு கொண்ட இக்கருவி ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும். பெயர் குறிப்பிடுவதுபோல், எல்ஜி ஸ்டைலஸ் 3 எழுத்தாணி பேனா அம்சத்தை ஆதரிக்கிறது உடன் 4ஜி எல்டிஇ இணைப்பு அம்சம் கொண்டு வருகிறது. அளவீட்டில் 155.6x79.8x7.4மிமீ மற்றும் 149 கிராம் எடையுடையது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

மிகவும் சக்திவாய்ந்த நோக்கியா 7 மற்றும் 8 (விலை, அம்சங்கள், வெளியீடு).!?

Best Mobiles in India

English summary
LG Stylus 3 With 5.7-Inch Display, Front Flash Launched at Rs. 18,500. Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X