எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது புதிய ஸ்மார்ட்போன்.!

|

எல்ஜி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதங்களை அறிமுகம் செய்துவருகிறது, அதன்படி இந்நிறுவனம் புதிய எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது புதிய ஸ்மார்ட்போன்.!

எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, பின்பு 1080 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது புதிய ஸ்மார்ட்போன்.!

இந்த எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம்; மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸமார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் சிறந்த வடிவமைப்பை
கொண்டுள்ளது.

எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது புதிய ஸ்மார்ட்போன்.!

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கெர்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் $219.99 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
LG Stylo 6 Launched With 6.8-Inch FHD+ Display, Stylus Pen: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X