6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி ஸ்டைலோ 4 அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

|

மிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி ஸ்டைலோ 4 ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு விரைவில் எல்ஜி ஸ்டைலோ 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எல்ஜி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி ஸ்டைலோ 4 அறிமுகம்.!

எல்ஜி ஸ்டைலோ 4 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 எல்ஜி ஸ்டைலோ 4  :

எல்ஜி ஸ்டைலோ 4 :

எல்ஜி ஸ்டைலோ 4 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

எல்ஜி ஸ்டைலோ 4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்டைலோ 4 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3300எம்ஏஎச்:

3300எம்ஏஎச்:

எல்ஜி ஸ்டைலோ 4 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.16,300-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
LG Stylo 4 with 6 2 inch full HD display, Android 8 1 Oreo launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X