48எம்பி கேமராவுடன் அசத்தலான புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
எல்ஜி நிறுவனம் ஜப்பானிய சந்தையில் எல்ஜி ஸ்டைல்3 எனப்படும் புதிய மிட் ரேஞ்சர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான டிஸ்பிளே
எல்ஜி ஸ்டைல்3 ஸ்மார்ட்போன் மாடல் 6.1-இன்ச் QHD+ ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3120 x 1440பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

எதிர்பார்த்த சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 845 பிராசரஸ் வசதியுடன் அட்ரினோ 630ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது,
பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

எல்ஜி ஸ்டைல்3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி ஸ்டைல்3 சாதனத்தில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. இந்த சாதனத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது எனவே பாதுகாப்பு வசதியுடன் பயன்படுத்த முடியும்.

எல்ஜி ஸ்டைல்3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா +5எம்பி செகன்டரி கேமரா என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ்), புளூடூத் 5 எல்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி 2.0
மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் ரூ.26,830-விலையில் விற்பனைக்குவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications