எல்ஜி மற்றும் சாம்சங் மொபைல்கள்: ஒப்பீட்டு பார்வை!

சாம்சங் சாம்ப் டியோஸ் மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. எல்ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போன் எச்டி-ஐபிஎஸ் எல்சிடி தொடுதிரை வசதி கொண்டது. இது 4.5 இஞ்ச் திரையின் மூலம் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். சாம்சங் சாம்ப் டியோஸ் மொபைலில் 2.6 டிஎப்டி திரை கொண்டது. இது 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.
ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவுடன், 1.3 மெகா பிக்ஸல் கொண்ட செகன்டரி கேமராவினையும் வழங்கும். சாம்சங் சாம்ப் டியோஸ் மொபைலில் 1280 X 1024 பிக்ஸல் கேமரா துல்லியத்தினை தரும். 1.3 மெகா பிக்ஸல் கேமரா மட்டும் தான் உள்ளது. அதோடு எல்ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனில் 3ஜி வசதியை பெறலாம். ஆனால் சாம்சங் சாம்ப் டியோஸ் மொபைலில் 3ஜி வசதி இல்லை.
சாம்சங் சாம்ப் டியோஸ் மொபைலை ரூ.4,800 விலையில் பெறலாம். குறைந்த விலையில் உயர்ந்த தொழில் நுட்பம் வேண்டும் என்று காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் சாம்ப் டியோஸ் மொபைல் மிக பொருத்தமான
ஒன்றாக இருக்கும். எல்ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போன் ரூ.10,000 விலை கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications