LG ரோல்லபில் ஸ்மார்ட்போன் ரெடி ஆகிறது.. 2021ல் கலக்கலாக அறிமுகமா? டிசைன் எப்படி இருக்கு?

|

எல்ஜி நிறுவனம் சுருளக்கூடிய ஓஎல்இடி டிவியை சமீபத்தில் அறிமுகப்படுத்து, அதனைத் தொடர்ந்து நிறுவனம் தற்பொழுது தனது எக்ஸ்ப்ளோரர் திட்டத்தின் கீழ் சுருளக்கூடிய ரோல்லபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி நிறுவனம் எக்ஸ்ப்ளோரர் திட்டத்தின் கீழ் பல தனித்துவமான வடிவமைப்புகளை சோதித்து, அவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்த முயன்று வருகிறது.

டப்பிங் பெயர் ப்ராஜெக்ட் பி (Project B)

டப்பிங் பெயர் ப்ராஜெக்ட் பி (Project B)

சமீபத்தில் எல்ஜி நிறுவனம் எல்ஜி விங் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. புதிய ரோல்லபில் ஸ்மார்ட்போனின் டப்பிங் பெயர் ப்ராஜெக்ட் பி (Project B) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2021 மார்ச்சில் வெளியாகலாம் என்று வதந்தி பரவியுள்ளது. லெட்ஸ் கோ டிஜிட்டல், சமீபத்தில் ஒரு ரோல்லபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போனின் காப்புரிமையைக் கண்டறிந்துள்ளது.

ரோல்-ஸ்லைடு மொபைல் டெர்மினல்

ரோல்-ஸ்லைடு மொபைல் டெர்மினல்

காப்புரிமை "ரோல்-ஸ்லைடு மொபைல் டெர்மினல் (Roll-slide mobile terminal)" என்று அழைக்கப்படுகிறது, இதை ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டில் எல்ஜி நிறுவனம் காப்புரிமைக்காகத் தாக்கல் செய்துள்ளது. பின்னர் இது இந்த ஆண்டு செப்டம்பரில் WIPO (உலக அறிவுசார் சொத்து அலுவலகம்) தரவுத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பொழுது எல்ஜி ஒரு புதிய ரோல்லபில் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கத் தயாராகிவிட்டது என்பது தெளிவாகியுள்ளது.

போக்குவரத்துக்கு விதிமீறல் காரணமாக ரூ. 42,500 அபராதம்.. 4 அடி நீட்ட பில்.. ஆடிப்போன போலீசார்..போக்குவரத்துக்கு விதிமீறல் காரணமாக ரூ. 42,500 அபராதம்.. 4 அடி நீட்ட பில்.. ஆடிப்போன போலீசார்..

இழுக்கக்கூடிய பிரேம்மில் மூடப்பட்ட OLED

இழுக்கக்கூடிய பிரேம்மில் மூடப்பட்ட OLED

புதிய ரோல்லபில் டிஸ்பிளே காப்புரிமையின்படி, ஸ்மார்ட்போனின் இடது மற்றும் வலது பக்கங்களிலிருந்து டிஸ்பிளே வெளியே வரும்படி டிசைன் வரைபடம் விவரிக்கின்றது. இந்த டிஸ்பிளே இழுக்கக்கூடிய பிரேம்மில் மூடப்பட்ட OLED ஆக வரும் என்று கூறப்படுகிறது. கூடுதல் டிஸ்பிளே பகுதியை நீங்கள் விரும்பவில்லை என்றால், டிஸ்பிளேவை உள்ளே இழுப்பதன் மூலம் ரோல்லபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் சாதாரண செவ்வக வடிவதிற்கு மாறிவிடும்.

இரண்டு பிரேம்

இரண்டு பிரேம்

எல்ஜி நிறுவனம் இந்த புதிய ரோல்லபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் சாதனத்திற்காக இரண்டு பிரேம்களைப் பயன்படுத்துகிறது, இதன் மூலம் பயனர் வேண்டிய நேரத்தில் டிஸ்பிளேவை பாப்-அவுட் செய்துகொள்ளலாம். ரோல்லபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போனின் எலாஸ்டிக் போன்ற டிஸ்பிளேக்காக கொரிய நிறுவனம் ஒரு மென்மையான மெக்கானிசம் கியர்களுடன் எலாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் என்று தெரிகிறது.

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு.!மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு.!

பாதுகாப்பு தடுப்பு மெக்கானிஸம்

பாதுகாப்பு தடுப்பு மெக்கானிஸம்

அதேபோல், எல்ஜி பயனரின் விருப்பத்திற்கு ஏற்றார் போல், டிஸ்பிளேவை ஒரு பக்கத்திலிருந்தோ அல்லது இரண்டு பக்கத்திலிருந்தோ வெளியேறும் படி எல்ஜி இந்த போனை வடிவமைத்துள்ளது. பயனர் விருப்பத்துடன் பயன்படுத்தும் தீர்மானத்தை நிறுவனம் வழங்கியுள்ளது. டிஸ்பிளே பிரேமில் இருந்து தற்செயலாக டிஸ்பிளே வெளியேறுவதைத் தவிர்க்க ஒரு பாதுகாப்பு தடுப்பு மெக்கானிஸத்தையும் நிறுவனம் வழங்கியுள்ளது.

பொறுத்திருந்து பார்க்கலாம்

பொறுத்திருந்து பார்க்கலாம்

மேம்பட்ட மல்டி டாஸ்கிங் திறன்கள், வெவ்வேறு யுஐ போன்ற பல விஷயங்களை இந்த புதிய ரோல்லபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போரிற்காக எல்ஜி நிறுவனம் தனது பெரிய பங்கைச் செலவிட நேரிடும் என்று கருதப்படுகிறது. தனித்துவமான வடிவமைப்பு என்பதனால், இதற்கான மென்பொருள் சாதனத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் இல்லை, பொறுத்திருந்து பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
LG Rollable Smartphone May Get Launch On March 2021 Next Year : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X