ஆண்ட்ராய்டு புதுப்பிப்பை பெறும் எல்ஜி-ன் இந்த மாடல் ஸ்மார்ட்போன்!
எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 உடன் கடந்தாண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது இந்த நிலையான புதுப்பிப்பு ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு தென்கொரியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு பதிப்பு ஜி 900என் 2சி, 2.2ஜிபி அளவுடன் வருகிறது. எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவுடன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாட்டுக்கான 5ஜி இணைப்பு தற்போதுவரை வரவில்லை.
ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு மேம்படுத்தல் ஜனவரி 2021., எல்ஜி வெல்வெட் 5ஜிக்கு கொண்டு வரும் என தெரிவிக்கப்படுகிறது. எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சினிமா முழு விஷன் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி 7என்எம் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 10 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.
எல்ஜி வெல்வெட் டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, எல்இடி பிளாஷ், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 5 மெகாபிக்சல் கேமரா வசதி இருக்கிறது. அதோடு 16 மெகாபிக்சல் செல்பி கேமார இதில் பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications