ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் எல்ஜி ஸ்மார்ட்போன்!

இந்த புதிய எக்ஸ்-3 ஸ்மார்ட்போன் சிறந்த தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் என்று நம்பலாம். எல்ஜி எக்ஸ்-3 ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் திரை வசதியை கொண்டது. இந்த அகன்ற திரை 1280 X 720 துல்லியத்தை வழங்கும்.
ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பேரடிங் சிஸ்டத்தில் இந்த புதிய ஸ்மார்ட்போன் இயங்கும். இதில் கேமரா வசதிகளும் மிக சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அழகான புகைப்படத்தை கொடுக்க இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. மேலும், வீடியோ காலிங் வசதிக்காக மற்றொரு 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது.
ஏதேனும் ஒரு முக்கிய தகவல்கள் இருப்பின் அதை உடனடியாக நட்பு வட்டாரங்களுடன் பகிர்ந்து கொள்வது இயல்பு. இந்த பரிமாறலுக்காக இதில் 4.0 புளூடூத் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏகப்பட்ட அப்ளிக்கேஷன்களை அப்லோட்
செய்து கொள்ள, இதன் 2,000 எம்ஏஎச் பேட்டரியும் ஒத்துழைக்கும். இதனால் சிறந்த டாக் டைம் மற்றும், ஸ்டான்-பை டைமும் நிச்சயம் கிடைக்கும்.
வருகிற 2012 ஆண்டு மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் நிச்சயம் இந்த எல்ஜி எக்ஸ்-3 ஸ்மார்ட்போன் முக்கியத்துவம் பெறும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications