6.1-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி ஜி9 ஆண்ட்ராய்டு ஓன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இக்கருவி 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.
கொரியாவில் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி ஜி9 ஆண்ட்ராய்டு ஓன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது எல்ஜி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எல்ஜி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் எல்ஜி ஜி9 ஸ்மார்ட்போன் மாடல் நீல நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா மட்டுமே பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

டிஸ்பிளே:
எல்ஜி ஜி9 ஸ்மார்ட்போன் மாடல் 6.1-இன்ச் க்யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3120 x 1440 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம்
இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:
எல்ஜி ஜி9 ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ஆடியோ பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
இக்கருவி 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் கைரேகை ஸ்கேனர் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி-விலை:
எல்ஜி ஜி9 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனி
ஆரம்ப விலை ரூ.38,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








