வாட்டர்ப்ரூப் அம்சம் கொண்ட எல்ஜி க்யூ8 ( விலை மற்றும் அம்சங்கள்).!

இந்த சாதனம் தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட் கிட்டத்தட்ட ரூ.34,969/- என்ற விலை நிர்ணயத்த பெற்றுள்ளது

|

ஜூலை மாத தொடக்கத்தில் எல்ஜி நிறுவனம் அதன் எல்ஜி க்யூ6, எல்ஜி க்யூ6 ப்ளஸ் மற்றும் எல்ஜி க்யூ6ஏ என்ற மூன்று புதிய க்யூ தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து எல்ஜி க்யூ8 என்ற ஸ்மார்ட்போனை அதன் க்யூ தொடர் வரிசையில் இன்னொரு தொலைபேசியாக அமைதியாக அறிவித்துள்ளது.

இந்த புதிய எல்ஜி க்யூ8 ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் எல்ஜி வி 20 சாதனத்தின் மினி பதிப்பாகும் என்று நிறுவனம் கூறுகிறது. 5.2 அங்குல க்யூஎச்டி பேனலில் இரண்டாம் டிஸ்பிளேவுடன் வருகிறது, பின்புறத்தில் இருந்து பார்க்கையில் இந்த தொலைபேசி அப்படியே வி20 போலவே தெரிகிறது. இருப்பினும் இந்த சாதனத்தின் விலை அறியப்படாமல் இருந்தது.

விலை நிர்ணய புள்ளி

விலை நிர்ணய புள்ளி

இந்த சாதனம் தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட் கிட்டத்தட்ட ரூ.34,969/- என்ற விலை நிர்ணயத்த பெற்றுள்ளது மற்றும் இந்த சாதனமானது அர்பன் டைட்டான் மற்றும் ஸ்வீட் பின்க் ஆகிய இரண்டு நிற வகைகளில் கிடைக்கிறது. இதே வண்ண மாறுபாடுகளில், இதே விலை நிர்ணய புள்ளியில் இக்கருவி இந்தியாவிலும் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீர் எதிர்ப்பு பதிப்பு

நீர் எதிர்ப்பு பதிப்பு

மெட்டல் பாடி கொண்டு வரும் இந்த எல்ஜி க்யூ8 ஆனது ஐபி67 வாட்டர்ப்ரூப், குவாட் டிஏசி கொண்டு வருவதால் இதனை அடிப்படையில் எல்ஜி வி20 ஸ்மார்ட்போனின் நீர் எதிர்ப்பு பதிப்பு என்றே கூறலாம். இந்த தொலைபேசி எல்ஜி வி20 போல் ஸ்னாப்டிராகன் 820 ப்ராசஸர் கொண்டு இயங்காமல் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் மூலம் இயங்குகிறது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

டிஸ்பிளேவை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் ஒரு 106x1040 பிக்சல் தீர்மானம் கொண்ட ஒரு 5.2-அங்குல க்யூஎச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டு வருகிறது. இதன் திரை கொரில்லா கிளாஸ் 4 உடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. எல்ஜி க்யூ8 ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் இது 3000எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா

கேமரா

4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு கொண்டுள்ள எல்ஜி க்யூ8 மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மேலும் மெமரி விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்குகிறது. ஒளியியல் துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் இரட்டை கேமராக்கள் (13 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் சென்சார்) கொண்டு வருகிறது, முன்பக்கம் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. இதன் பின்புற கேமரா 4கே 2160பி வீடியோ திறனுடனான 1080பி வீடியோவை பதிவு செய்யும் திறன் கொண்ட ஒரு பரந்த லென்ஸுடன் வருகிறது.

இரண்டு வண்ண வகை

இரண்டு வண்ண வகை

முன்னர் வெளியான எல்ஜி க்யூ6, எல்ஜி க்யூ6 ப்ளஸ் மற்றும் எல்ஜி க்யூ6ஏ என்ற மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை மூன்று கருவிகளும் நிறுவனத்தின் புஃல்விஷன் (FullVision) டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், எல்லா தொலைபேசிகளும் கிட்டத்தட்ட ஒரே போன்ற வடிவமைப்புடன் உருவாக்கம் பெற்றுள்ளன மற்றும் இக்கருவிகள் ஆஸ்ட்ரோ பிளாக் மற்றும் ஐஸ் பிளாட்டினம் என்ற இரண்டு வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
LG Q8 priced revealed, to be available in Urban Titan and Sweet Pink colours. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X