வியக்கவைக்கும் விலையில் எல்ஜி க்யூ8 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
எல்ஜி க்யூ8 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,900-ஆக உள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எல்ஜி க்யூ8(2018) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது எல்ஜி நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் ஆடியோ வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிடிஎஸ்: எக்ஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் மற்றும் ஹை-ஃபை குவாட் டிஏசி தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

எல்ஜி க்யூ8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கருப்பு மற்றும் நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
எல்ஜி க்யூ8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.2-இன்ச முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி:
இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
எல்ஜி க்யூ8 ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை ஒரளவு நான்றாக இருக்கிறது என்று தான் கூறவேண்டும், அதன்படி 16எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த எல்ஜி க்யூ8 ஸ்மார்ட்போன்.

வியக்கவைக்கும் விலை:
எல்ஜி க்யூ8 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,900-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications