Home
Mobile

அசத்தலான எல்ஜி கியூ70 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

எல்ஜி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் புதிய எல்ஜி கியூ70 (Q70)என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலின் விலை சற்று உயர்வாக இருக்கிறது, இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அசத்தலான எல்ஜி கியூ70 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

தற்சமயம் இந்த சாதனம் தென்கொரியாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி கியூ70 டிஸ்பிளே:

எல்ஜி கியூ70 டிஸ்பிளே:

எல்ஜி கியூ70 ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் Hole-Punch டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 1080x2310 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9:5 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சிறந்த சிப்செட் வசதி:

சிறந்த சிப்செட் வசதி:

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 735எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய் 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு எல்ஜி கியூ70 சாதனம்
இயங்கும்.

சேமிப்பு வசதி:

சேமிப்பு வசதி:

எல்ஜி கியூ70 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா அமைப்பு:

கேமரா அமைப்பு:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா +13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மூன்றாம் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறி அம்சம், என பல்வேறு வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அட்டகாசமான பேட்டரி:

அட்டகாசமான பேட்டரி:

எல்ஜி கியூ70 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், கைரேகை சென்சார், கூகிள் உதவி பொத்தான், ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 வியக்கவைக்கும் விலை:

வியக்கவைக்கும் விலை:

இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.32,600-ஆக உள்ளது, குறிப்பாக கருப்பு நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG Q70 With Hole-Punch Display Launched Price specs and more details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X