பட்ஜெட் விலையில் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
எல்ஜி நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன்கள் இப்போது தென்கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் எல்ஜி க்யூ7இ க்யூ7 பிளஸ் மற்றும் க்யூ7 ஆல்ஃபா போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். மேலும் பல்வேறு அம்சங்களைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவந்துள்ளது.
எல்ஜி நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன்கள் இப்போது தென்கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
எல்ஜி க்யூ7, க்யூ7 பிளஸ் மற்றும் க்யூ7 ஆல்ஃபா ஸ்மார்ட்போன்கள் பொதுவாக 5.5-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளன. பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றம் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இக்கருவிகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

சேமிப்பு:
எல்ஜி க்யூ7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் ஹெலியோ பி10 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

க்யூ7 பிளஸ் மற்றும் க்யூ7 ஆல்ஃபா சேமிப்பு:
எல்ஜி க்யூ7 பிளஸ் மற்றும் க்யூ7 ஆல்ஃபா ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளன. அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளன இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள்.

கேமரா:
எல்ஜி க்யூ7 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 16எம்பி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன, அதன்பின்பு எல்ஜி க்யூ7 மற்றும் க்யூ7 ஆல்ஃபா ஸ்மார்ட்போன்கள் 13எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு க்யூ7 மறறும் க்யூ7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளன, ஆனால் க்யூ7 ஆல்ஃபா ஸ்மார்ட்போன் மட்டும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.


ஆண்ட்ராய்டு ஓரியோ:
இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன. பின்பு கைரேகை ஸ்கேனர் மற்றம் பல்வேறு இணைப்பு ஆதவுகளை கொண்டுள்ளது இந்த எல்ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள்.


Click it and Unblock the Notifications