எல்ஜி Q7 மற்றும் Q7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை வெளியானது.!
தென் கொரிய மொபைல் உற்பத்தியாளரான எல்ஜி நிறுவனடத்தின் எல்ஜி Q7 மற்றும் Q7 ப்ளஸ் கடந்த மாதம் அறிமுகமானது என்பதை நாம் அறிவோம்
தென் கொரிய மொபைல் உற்பத்தியாளரான எல்ஜி நிறுவனடத்தின் எல்ஜி Q7 மற்றும் Q7 ப்ளஸ் கடந்த மாதம் அறிமுகமானது என்பதை நாம் அறிவோம். அதன் உத்தியோகபூர்வ உள்நாட்டு விலை நிர்ணயம் நேற்று (புதன்) அறிவிக்கப்பட்டுள்ளது. அரோரா பிளாக் மற்றும் லாவெண்டர் வயலட் ஆகிய வண்ண மாறுபாடுகளில் வெளியாகுயுள்ள எல்ஜி Q7 ஆனது தோராயமாக ரூ.30,900/-க்கும் மற்றும் Q7 ப்ளஸ் ஆனது சுமார் ரூ.35,600/-க்கும் சந்தையை எட்டலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரியாவில் உள்ள மூன்று பெரிய மொபைல் கேரியர்களும் இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில், ஜூன் மாத ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்களின் மூன்றாவது மாறுபாடான எல்ஜி Q7 ஆல்ஃபாவின் விலை நிர்ணயம் பற்றிய எந்த வார்த்தையும் இல்லை.
எல்ஜி Q7, Q7 ப்ளஸ்-ன் அம்சங்கள்.!
எல்ஜி Q7 மற்றும் Q7 ப்ளஸ் ஆகோய இரண்டுமே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இயங்குகிறது மற்றும் 5.5 அங்குல முழு எச்டி+ (1080x2160 பிக்சல்கள்) மற்றும் 18: 9 விகிதம் மற்றும் 442பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண் புல் வியூ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 450 SoC உடனான அட்ரெனோ 506ஜிபியூ உடன் இணைந்து இயக்கப்படுகிறது.
ரேம் மற்றும் சேமிப்பகத்தின் அளவு அடிப்படையில் இரண்டு ஸ்மார்ட்போன் வகைகளும் வேறுபடுகின்றன. எல்ஜி Q7 ஆனது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான சேமிப்பு மாடலின் கீழ் கிடைக்கிறது. மறுகையில் உள்ள எல்ஜி Q7+ ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள் சேமிப்பு மாடலின் கேள் கிடைக்கிறது. இரண்டுமே மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக (2TB வரை) விரிவாக்கக்கூடிய ஆதரவை வழங்குகிறது.
கேமராவை பொறுத்தவரை, எல்ஜி Q7 ஆனது ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சாரை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள எல்ஜி Q7+ ஆனது ஒரு PDAF லென்ஸ் உடனான ஒரு 16 மெகாபிக்சல் பின்புற சென்சார் உடன் வருகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை இரண்டுமே 100 டிகிரி லென்ஸ் அளவிலான ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வருகிறது மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரு 3000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், ப்ளூடூத் வி5.0 எல்இ, என்எப்சி, எப்எம் ரேடியோ மற்றும் யூஎஸ்பி டைப்-சி 2.0 ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. எல்ஜி Q7 மற்றும் Q7 + ஆகியவை ஒரே மாதிரியான வடிவமைப்பையும் அளவீட்டையும் கொண்டுள்ளன. அதாவது 143.8x69.3x8.4 மிமீ மற்றும் 145 கிராம் எடையும் கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications