ரூ.13,490-விலை: மூன்று ரியர் கேமரா: புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
எல்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய எல்ஜி Q60 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்றுதான்
கூறவேண்டும்.

அக்டோபர் 1
குறிப்பாக மூன்று ரியர் கேமராக்கள் ஆதரவு, டிடிஎஸ்:எக்ஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் அம்சம், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் நீல நிறத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி துதல் ஆஃப்லைன் மற்றும் சில ஆன்லைன் தளங்களில் கிடைக்கும். இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.

அசத்தலான டிஸ்பிளே
எல்ஜி Q60 ஸ்மார்ட்போன் 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 × 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி
2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் அடிப்படையாக கொண்டு இந்த எல்ஜி Q60 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை கொண்டுள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா அமைப்பு
எல்ஜி Q60 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
எல்ஜி Q60 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி
வோல்ட்இ, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு மற்றும் விலை
3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட எல்ஜி Q60 சாதனத்தின் விலை ரூ.13,490-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications