விரைவில் : எல்ஜி க்யு6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் போன்ற வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் மினிமல் பெசல்ஸ் மற்றும் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்கள்.!
எல்ஜி நிறுவனம் பொருத்தவரை இந்தியாவில் தரமான பொருட்களை விற்ப்பனை செய்து வருகிறது. தற்போது அந்நிறுவனம் க்யு6, க்யு6 பிளஸ் மற்றும் க்யு6ஏ போன்ற ஸ்மார்ட்போன்களை முக்கிய ஆசிய சந்தைகளில் விற்ப்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா போன்ற இடங்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல மென் பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளதாக எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புல்விஷன் டிஸ்ப்ளே :
இந்த ஸ்மார்ட்போன்கள் புல்விஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (2160-1080) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவைகளாக உள்ளன. இத்துடன் 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்ட யுனிபாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார்:
இந்த ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் போன்ற வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் மினிமல் பெசல்ஸ் மற்றும் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்கள்.

ரேம் மற்றும் மெமரி:
க்யு6 ஸ்மார்ட்போன் பொருத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு க்யு6ஏ பொருத்தவரை
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்டுள்ளது, மேலும் க்யு6 பிளஸ் பொருத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வரை மெமரி இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 435:
க்யு6 ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்-காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1(நௌகட்) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

கேமரா:
க்யு6 பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. வைஃபை 802.11, என்எப்சி, ப்ளூடூத் 4.2 , யுஎஸ்பி-2.0, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுளன.

3000எம்ஏஎச்:
க்யு6 ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications