Home
Mobile

ரூ.14,990/-க்கு இந்தியாவில் எல்ஜி க்யூ6 - என்னென்ன அம்சங்கள்.?

திர்பார்க்கப்படும் எல்ஜி க்யூ6 ப்ளஸ் ஆனது செப்டம்பர் 5 அன்று தொடங்கப்படலாம்.

By Muthuraj

எல்ஜி நிறுவனம், சமீபத்தில் இந்தியாவில் அதன் எல்ஜி க்யூ6 ஸ்மார்ட்போனை ரூ.14,990/- என்ற விலைக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது, எல்ஜி நிறுவனத்தின் குஜராத் சில்லறை விற்பனையாளரான மகேஷ் டெலிகாம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் மிக விரைவில் எல்ஜி நிறுவனம் அதன் க்யூ6+ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ரூ.14,990/-க்கு இந்தியாவில் எல்ஜி க்யூ6 - என்னென்ன அம்சங்கள்.?

மேலும் வெளியான தகவலில் இருந்து, எல்ஜி க்யூ6 + ஆனது பிரத்தியேக ஆஃப்லைன் மாதிரியாக இருக்கும் மற்றும் ஆஃப்லைனில் அளவான விற்பனையையே நிகழ்த்தும் என்பதை உறுதி செய்துள்ளது. எல்ஜி கே 6 சாதனம், அமேசான் இந்தியாவில் பிரத்தியேகமாக விற்பனையாகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எதிர்பார்க்கப்படும் எல்ஜி க்யூ6 ப்ளஸ் ஆனது செப்டம்பர் 5 அன்று தொடங்கப்படலாம்.

எல்ஜி நிறுவனம் - க்யூ6ஏ, எல்ஜி க்யூ6, மற்றும் எல்ஜி க்யூ6 ப்ளஸ் ஆகிய க்யூ6 வரிசை கருவிகளை இதர சந்தைகளில் அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் இந்தியாவில் அறிமுகமாகும் க்யூ6 ப்ளஸ் என்ற இடைப்பட்ட தொடர் சாதனத்தின் முக்கிய சிறப்பம்சமாக எல்ஜி ஜி6-இல் பார்த்துள்ளதைப் போலவே 18: 9 விகித மற்றும் குறைந்த பக்க பெஸல்கள் உடனான புல்விஷன் டிஸ்பிளே கொண்டுள்ளதுதான்.

எல்ஜி க்யூ6ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 2160 x 1080 பிக்சல்கள் மற்றும் 442பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஒரு 5.5 அங்குல முழு எச்டி ப்ளஸ் புல்விஷன் டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 செயலி மூலம் இயங்கும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு கொண்ட இக்கருவி ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயக்க அமைப்பிலான எல்ஜி யூஎக்ஸ் 6.0கொண்டு செயல்படும்.

ரூ.14,990/-க்கு இந்தியாவில் எல்ஜி க்யூ6 - என்னென்ன அம்சங்கள்.?

3000எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்ட இக்கருவியின் கேமரா அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் அகலமான முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. உடன் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்போன் ஜாக், ஆகிய இணைப்பு விருப்பங்கள் கொண்டுள்ள இக்கருவியோ அளவீட்டில் 142.5 x 69.3 x 8.1 மிமீ மற்றும் 149 கிராம் எடையுள்ளதாக உள்ளது.

Best Mobiles in India

English summary
LG Q6 plus launching in India soon. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X