Subscribe to Gizbot

பிரத்தியேக ஸ்கொயர் கேமராவுடன் பட்ஜெட் விலையில் எல்ஜி க்யூ6.!

Written By:

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்திய சந்தையில் அதன் முதல் க்யூ தொடர் ஸ்மார்ட்போன் ஆன எல்ஜி க்யூ6-ஐ அறிவித்துள்ளது. ரூ.14,990/- என்ற பட்ஜெட் விலைக்கு அறிமுகமாகியுள்ள இக்கருவியில் புல்விஷன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரத்தியேக ஸ்கொயர் கேமராவுடன் பட்ஜெட் விலையில் எல்ஜி க்யூ6.!

மேலும் இந்த எல்ஜிக்யூ6 ஸ்மார்ட்போன், பாதுகாப்பான முக அங்கீகரிப்பு தொழில்நுட்பம், மிலிட்டரி க்ரேட் ஆயுள் மற்றும் சக்திவாய்ந்த வன்பொருள் போன்ற சிறந்த அம்சங்களின் கலவையாகும். இந்திய சந்தையில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மீதான நுகர்வோர்களின் எதிர்பார்ப்பை எல்ஜிக்யூ6 எப்படி மாற்றியமைக்கும் என்றே கூறலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பெஸல்லெஸ் வடிவம்

பெஸல்லெஸ் வடிவம்

2017-ன் முதல் பாதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனால் கவரப்பட்டு அதே புல்விஷன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கொண்டு பட்ஜெட் விலை நிர்ணயத்தில் வெளியாகிறது. ஒரு புதிய 18: 9 விகிதம் கொண்ட 5.5 அங்குல முழு எச்டி + முழுவிளக்க காட்சி (2,160x1,080பி) டிஸ்பிளே கொண்டுள்ளது. வீடியோ உலாவல், கேமிங் மற்றும் மல்டி-டாஸ்கிங்கில் அதிவேகத்தை வழங்குகிறது. எல்ஜி க்யூ6 ஒரு பெஸல்லெஸ் வடிவமும் அதற்கு காரணியாக உள்ளது.

காம்பாக்டிக் வடிவத்தில்

அழகியல் மற்றும் கடினத்தன்மையில் சமரசம் செய்யாமல் திரையை அதிகரிக்கிறது. சிறிய வடிவத்தில் உள்ள உள்ளடக்கங்களையும் காம்பாக்டிக் வடிவத்தில் அதிக உள்ளடக்கம் கொண்டதாய் காண இது அனுமதிக்கிறது. எல்ஜி விற்பனை சேவையின் ஆதரவைப் பெற்றதுடன், 6 மாதங்களுக்குள் ஒரு முறை இலவச திரை மாற்றுப்பணியையும் நீங்கள் பெறுவீர்கள்.

ஆயுள் மற்றும் பணிச்சூழலியல் மீது அதிக கவனம்

ஆயுள் மற்றும் பணிச்சூழலியல் மீது அதிக கவனம்

அனைத்து உலோக வடிவமைப்பான இக்கருவி மறுபக்கம் எடை குறைவான ஒரு சாதனமாகவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் உலோக உடல் வலுவான 7000 சீரியஸ் அலுமினியத்திலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் இலகுரக 'எச் பீம்' ப்ரேம் மூலம் திடப்படுத்தப்படுவதன் காரணமாக இதன் எடைகுறைவு சாத்தியமாகிறது.

சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை

இந்த வடிவமைப்பு எந்த திசையிலிருந்தும் ஏற்படும் தாக்கத்தை தாங்கும் சகிப்புத்தன்மையை கருவிக்கு அளிக்கிறது. மேலும் இதன் புதிய 18: 9 விகிதம் மற்றும் மெல்லிய பெஸல்கள் இக்கருவியை உங்கள் கைகளுக்கும் பொருந்த செய்கிறது. தொடுவதற்கு, பயன்படுத்த, மற்றும் பிடிப்பதற்கு வசதியாக இருக்கும், உங்கள் கட்டைவிரல் திரையின் எந்தப் பகுதியையும் எளிமையாக அடைய முடியும்.

பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட பேஸ் லாக்

பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட பேஸ் லாக்

ரூ.15,000/-க்கு கிடைக்கும் கருவிகளில் உயிரியளவுகள் பாதுகாப்பு அம்சங்களை காணலாம், இக்கருவி ஒருபடி மேலே செல்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட முகத்தை அங்கீகரிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. ஆகையால், ஸ்வைப் செய்தல் அல்லது எந்த பாஸ்வேர்ட் தட்டச்சு செய்தல் போன்றவைகளின்றி விரைவாகவும் வசதியாகவும் தொலைபேசி திறக்க பயன்படுத்தப்படலாம்.

கேமராத்துறை

கேமராத்துறை

100 டிகிரி வைட் கோண லென்ஸ் கொண்ட இதன் 5எம்பி வைட் செல்பீ கேமரா க்ரூப் செல்பீக்களில் எதையும் தவறவிடாது. இதன் முன் கேமராக்கு 100 டிகிரி பிக்ஸல் பார்வை உள்ளது, அனைத்தயும் சட்டகத்தில் பொருந்துவதை உறுதி செய்யும். இக்கருவியை உள்ள கேமரா பயன்பாடானது உடனடி சமூக பகிர்வு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் கேமரா பயன்பாட்டிலிருந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் படங்களைப் பகிர்ந்து கொள்ளவும் உங்களை அனுமதிக்கும்.

பிரத்தியேக ஸ்கொயர் கேமரா

பிரத்தியேக ஸ்கொயர் கேமரா

பின்புற கேமராவைப் பொறுத்தவரை, எல்இடி ப்ளாஷ் ஒளியுடன் 13எம்பி கேமராவை கொண்டுள்ளது. இதன் கேமரா பயன்பாட்டில் எல்ஜி பிரத்தியேக ஸ்கொயர் கேமரா உள்ளது, இதில் நான்கு கிரியேட்டிவ் ஷாட் முறைகள் உள்ளன. சதுர கேமரா மூலம் நீங்கள் எடுக்கும் படங்கள் நேரடியாக இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் பதிவேற்றப்படலாம், எந்தவிதமான க்ராப் அல்லது எடிட்டிங் பணிகளும் தேவைப்படாது.

சக்தி வாய்ந்த வன்பொருள்

எல்ஜிக்யூ6 ஆனது ஒரு ஆக்டேர்-கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 செயலி மற்றும் கிராபிக்ஸ் பகுதியை கையாள, அட்ரெனோ 505 ஜிபியூ மூலம் உடன் இணைந்து மல்டிடிஸ்க்கிங்கிற்கான 3 ஜிபி ரேம் உடன் இயங்குகிறது. சேமிப்பு ஆதரவை பொறுத்தமட்டில் 32 ஜிபி வரை உள்ளடக்க சேமிப்பையும், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபிவரை விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது. 3,000எம்ஏஎச் பேட்டரி கொண்ட இக்கருவி வைஃபை 802.11 இ/ஜி/என், ப்ளூடூத் 4.2 மற்றும் யூஎஸ்பி டைப்-பி 2.0 ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
LG Q6: Most Interesting and feature packed budget smartphone in India. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot