48எம்பி கேமரா, 4000எம்ஏஎச் பேட்டரியுடன் எல்ஜி Q52 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி Q52 ஸ்மார்ட்போன் மாடலை தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சில்கி வைட் மற்றும் சில்கி ரெட் நிறங்களில் வெளிவந்துள்ளது. அதேபோல் விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஜி Q52 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் FullVision டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த எல்ஜி Q52 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

எல்ஜி Q52 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஞ52 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

எல்ஜி Q52 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. ஆனால் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.

4ஜி வோல்ட்இ, வைஃபை802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். எல்ஜி Q52 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது தென் கொரியாவில் (இந்திய மதிப்பின்படி) தோராயமாக ரூ.21,500 என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








