மிரட்டலான எல்ஜி Q51 ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை இவ்வளவு தான்!
மிகவும் எதிர்பார்த்த எல்ஜி Q51 ஸ்மார்ட்போன் மாடலை தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது எல்ஜி நிறுவனம், குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் வசதி மற்றும அட்டகாசமான கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
எல்ஜி Q51 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் முழுவிஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 10
எல்ஜி Q51 ஸ்மார்ட்போனில் குவால்காம் மீடியாடெக் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளவந்துள்ளது. மூன்லைட் டைட்டானியம் மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.டி.எஸ்: எக்ஸ் 7.1 சேனல் சவுண்ட்
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். ஆடியோவைப் பொறுத்தவரை, இது டி.டி.எஸ்: எக்ஸ் 7.1 சேனல் சவுண்ட் சிஸ்டத்துடன் வருகிறது.

எல்ஜி Q51 கேமரா
எல்ஜி Q51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்..

எல்ஜி Q51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது. குறிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

இணைப்பு ஆதரவுகள்
எல்ஜி Q51 ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவுகள் அடக்கம். இந்த சாதனத்தின் விலை 317,000 won (இந்திய மதிப்பில் ரூ.18,757)


Click it and Unblock the Notifications