கம்மி விலையில் LG Q31 சத்தமில்லாமல் அறிமுகம்! அமெரிக்காவை அடுத்து இங்கே தான் விற்பனை!

|

எல்ஜி நிறுவனம் தனது புதிய LG Q31 என்ற மலிவு விலை ஸ்மார்ட்போன் மாடலை சத்தமில்லாமல் தற்பொழுது கொரியன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. LG K31 என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கடந்த மாதம் எல்ஜி நிறுவனம் அமெரிக்கா சந்தையில் அறிமுகம் செய்தது. டூயல் கேமரா அம்சத்துடன் தனது வலைத்தளம் வழியாக நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபரத்தைப் பார்க்கலாம்.

எல்ஜி Q31 அறிமுகம்

எல்ஜி Q31 அறிமுகம்

ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு தான் இப்பொழுது மவுசு அதிகமாகவுள்ளது. இதை உணர்ந்த எல்ஜி நிறுவனம் தற்பொழுது எல்ஜி Q31 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி Q31 ஸ்மார்ட்போனில், 5.7' இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720 x 1520 பிக்சல்கள் மற்றும் 18.9: 9 விகித நாட்ச் ஃபுல்விஷன் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இது பின்புறமாகப் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது.

ஸ்டோரேஜ் விபரம்

ஸ்டோரேஜ் விபரம்

இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியுடன், ஆக்டா கோர் மீடியாடெக் MT6762 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1 டிபி வரை சேமிப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இடது பக்கத்தில் பிரத்தியேக Google அசிஸ்டன்ட் பட்டனையும் நிறுவனம் ஸ்மார்ட்போனுடன் இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!

கேமரா விபரம்

கேமரா விபரம்

எல்ஜி Q31 ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் கொண்ட ஒரு பிரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சாருடன், இரட்டை கேமரா அமைப்பை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 5 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி ஷூட்டர் கேமராவையும் நிறுவனம் U ஷேப் நாட்ச் உடன் வழங்கியுள்ளது.

பேட்டரி விபரம்

பேட்டரி விபரம்

எல்ஜி கே 31 ஸ்மார்ட்போனில், 3000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது. இணைப்பு முன்னணியில், இது 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போன் 147.82x71.12x8.63 மிமீ அளவோடும் 146 கிராம் எடையோடும் வருகிறது.

டெபிட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இனி புதிய விதிகள்? செப்.30, முதல் நடைமுறைக்கு வரும் RBI உத்தரவு

விலை

விலை

எல்ஜி Q31 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி சேமிப்பக மாடல் கொரியன் சந்தையில் 2,09,000 கேஆர்டபிள்யூ என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 13,150 என்ற விலையில் மெட்டாலிக் சில்வர் கலர் விருப்பத்தில் வருகிறது. இந்த தொலைபேசி செப்டம்பர் 25 முதல் தென் கொரியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
LG Q31 announced with dual rear cameras, Android 10 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X