மிரட்டலான எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

கியூ சீரிஸ் வரிசையில் எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ் (LG Q Stylus+) என்ற புது மாடல் ஸ்மார்ட்போன் ஐ அறிமுகம் செய்துள்ளது.

By Sharath
|

எல்ஜி நிறுவனம் தனது கியூ சீரிஸ் போன்களின் வரிசையில் புதிய என்னை இணைத்துள்ளது. கியூ சீரிஸ் வரிசையில் எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ் (LG Q Stylus+) என்ற புது மாடல் ஸ்மார்ட்போன் ஐ அறிமுகம் செய்துள்ளது.

இந்த புது எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ் ஸ்மார்ட் போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டைலஸ் 3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ்

எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ்

புதிய எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ் ஸ்மார்ட் போன் அரோரா பிளாக் மற்றும் மொராக்கோ ப்ளூ வண்ணத்தில் செப்டெம்பம்பேர் 5, நாளை முதல் கிடைக்கும். இந்த புதிய எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ் இன் சிறப்பம்சம் என்னவென்றால் 6.2 இன்ச் முழு எச்டி திரையுடன் கூடிய 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் சிப்செட் உடன் வருகிறது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்புடன் அசத்தலான 2டிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது.

அட்டகாசமான க்யூ ஸ்டைலஸ் பிளஸ்

அட்டகாசமான க்யூ ஸ்டைலஸ் பிளஸ்

எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் MIL-STD 810G தர சான்று பெற்ற, ராணுவ தரம் கொண்ட சிறந்த டியூரபிலிட்டி உடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ப்ரூப் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட அட்டகாசமான ஸ்மார்ட் போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ் விபரக்குறிப்பு:

எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ் விபரக்குறிப்பு:

- 6.2 இன்ச் 18:9 FHD+ 2160x1080 பிக்சல் 18:9 ஃபுல் விஷன் 389ppi 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750S பிராசஸர்
- மாலி T860 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF
- 8 எம்பி முன்பக்க கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி 2.0
- 3,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

விலை

விலை

இந்தியாவில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 5ம் தேதி முதல் மோட்டோ விற்பனை மையங்களில் ரூ.21,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
LG Q Stylus+ with 6.2-inch Full HD+ display, stylus support launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X