சரியான நேரத்தில் அட்டகாச மாஸ்க்: இரண்டு வடிப்பான்களோடு எல்ஜி ப்யூரி கேர் முகக்கவசம்!
முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் எல்ஜி ப்யூரி கேர் சுத்திகரிப்பான் முகக்கவசத்தை அம்சத்தோடு அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா தொற்று பரவல்
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று முகக்கவசம், கையுறை அணிதல். அதோடு கொரோனா பரவலுக்கு ஏற்ப ஊரடங்கானது தளர்வுகளோடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்
கொரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பலரும் தவித்து வருகின்றனர். உச்சத்தில் இருந்தவர் திடீரென வேலை இழந்து கடனாளியாக மாறும் நிகழ்வு இந்த கொரோனா காலங்களில் அரங்கேறியுள்ளது.

கொரோனா முடிவை எதிர்நோக்கி
கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும், நிலைமை எப்போது சீராக மாறும் என பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. கொரோனாவுக்கு முன் பின் என காலங்கள் இரண்டாக பிரிக்கப்படும் அளவிற்கு காலங்கள் மாறியுள்ளது.

அனைத்து இடத்திலும் மாஸ்க் விற்பனை:
கொரோனாவை கட்டுபடுத்த மாஸ்க்குகள், கையுறைகள் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க்குகள் ஆரம்பத்தில் என்95, 3 லேயர், 7 லேயர் போன்ற மாஸ்க்குகள் விற்பனை செய்து வந்தாலும். இப்போது ரோட்டோர கடைகள் என அனைத்து பகுதிகளிலும் ரூ.10-ல் தொடங்கி மாஸ்க்குகள் விற்பனை செய்யப்படுகிறது.

கண்துடைப்புக்கு அணியும் மாஸ்க்:
என் 95 மாஸ்க்குகளை அணிவது பாதுகாப்பு என வலியுறுத்தி வந்தாலும் சிலர் அரசு உத்தரவுக்கு இணங்க ஏதாவது மாஸ்க் அணிந்தால் போதும் என பனியன் துணிகளில் தயாரிக்கப்படும் பத்து ரூபாய் மாஸ்க்குகளை அணிகின்றனர்.

எல்ஜி ப்யூரி கேர் மாஸ்க்
எல்ஜி ப்யூரி கேர் காற்று சுத்திகரிப்பான முகக்கவசத்தை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாஸ்குகளில் ஹெச்13, ஹெச்இபிஏ வடிப்பான்கள் பயன்படுத்தி காற்று சுத்திகரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூழ்நிலையக்கேற்ப முகக்கவசம்
கொரோனா காலத்திற்கு ஏற்ப கொரிய நிறுவனமான எல்ஜி தற்போதைய சூழ்நிலையக்கேற்ப முகக்கவசத்தை அறிமுகம் செய்துள்ளது. கையடக்க கருவியாக அறிமுகம் செய்துள்ள முகக்கவசம் மின்னூட்டம் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு வடிப்பான்களோடு எல்ஜி ப்யூரி கேர்
எல்ஜி ப்யூரி கேர் அறிமுகம் செய்துள்ள இந்த முகக்கவசம் ஹெச்13 ஹெச்இபிஏ என்ற இரண்டு வடிப்பான்கள் மூலம் காற்று சுத்திகரிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த மாஸ்குகளில் கிருமிகளை அழிப்பதற்கு யூவி கதிர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த முகக்கவசம் அணிந்து மூச்சை வெளியேற்றும் போதும், உள் இழுக்கும் போதும் காற்றின் தன்மைக்கேற்ப இதில் பொருத்தப்பட்டிருக்கும் வடிப்பான்கள் செயல்படும். காற்றின் தன்மைக்கேற்ப இதில் உள்ள விசிறிகளின் வேகம் தானாக கட்டுப்படுத்தப்படுகிறது.

820 எம்ஏஹெச் சேமிப்பு திறன்
இந்த முகக்கவசமானது 820 எம்ஏஹெச் சேமிப்பு திறன் கொண்டது. இந்த முகக்கவசத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 8 மணி நேரம் இயங்கும். கொரோனா காலத்தில் அதிக நேரம் வெளியே பயணிக்கும் நபர்களுக்கு இந்த முகக்கவசம் மிக பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
source: forbes.com


Click it and Unblock the Notifications








