Home
Mobile

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் எல்ஜி பிரடா ஸ்மார்ட்போன்!

By Super

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் எல்ஜி பிரடா ஸ்மார்ட்போன்!
மொபைல் உலகில் தனது தொழில்நுட்ப வலிமையை பரைசாற்றி வரும் எல்ஜி நிறுவனம் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பிரடா 3.0 என்ற ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த பிரடா 3.0 ஸ்மார்ட்போன் ஏகபோக வசதிகளையும், தொழில் நுட்பங்களையும் வழங்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது. பிராடா 3.0 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு இயங்கும்.

இந்த ஸ்மார்ட்போன் டிஎப்டி தொடுதிரை வசதியினை கொண்ட ஸ்மார்ட்போன். 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தை வழங்கும். ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் பிரெட் இயங்குதளத்தை எளிதாக இயக்க இதில் 1000 மெகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் டி-1 ஓஎம்ஏபி 4430 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் 1920 X 1080 பிக்ஸல் அதிக திரை துல்லியத்தை பெறலாம். இதில் உள்ள புளூடூத் மற்றும் யூஎஸ்பி வசதியினால் தகவல்களை அதி வேகத்தில் பரிமாற்றமோ, பதிவேற்றமோ செய்யலாம்.

இன்டர்நெட் வசதிகளை பெற வைபை தொழில் நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. எல்ஜி பிராடா ஸ்மார்ட்போனில் 8,000எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினை பெற்று பயனடையாலாம். உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட 1540 எம்ஏஎச் லித்தியம்-அயான் பேட்டரி உள்ளதால் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைம் வசதியினை பெறலாம்.

ஜிஎஸ்எம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த எல்ஜி பிராடே 3.0 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X