Home
Mobile

எல்ஜி பிரடா 3.0 மற்றும் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன்: ஒப்பீடு

By Super

எல்ஜி பிரடா 3.0 மற்றும் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன்: ஒப்பீடு
இந்த முறை நிறைய தொழில் நுட்பங்களை தொடர்ந்து கொடுத்து சாதனை நிகழ்த்தியதில் சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்களும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இரண்டு நிறுவங்களின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்களை இங்கே ஒப்பிட்டு பார்க்கலாம்.

எல்ஜி பிராடா 3.0 ஸ்மார்ட்போன் ஐபிஎஸ் எல்சிடி தொடுதிரை வசதியை கொண்டுள்ளது. இதனால் எந்த தகவல்களையும், புகைப்படங்களையும் தெளிவாக இந்த திரையில் பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனில் சூப்பர் அமோல்டு தொடுதிரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. திரையின் தொழில் நுட்பங்கள் மட்டும் அல்ல அதன் திரை அளவும் முக்கியமாக இருக்கிறது. அதை பொருத்த வரையில் எல்ஜி பிராடா 3.0 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் அகன்ற திரையை வழங்கும்.

சாம்சங் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனும் வசதியில் ஒன்றும் குறைந்தது அல்ல என்பதை நிரூபித்து உள்ளது. இந்த நெக்சஸ் ஸ்மார்ட்போனில் 4.65 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.

எல்லா ஸ்மார்ட்போன்களுக்குமே அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக முக்கியமான ஒன்று. எல்ஜி பிராடா 3.0 ஸ்மார்ட்போன் வி2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்தில் இயங்கும். கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் வி4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் இயங்கும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே திரை விஷயத்தில் மிக கம்பீரமான தோற்றத்தினை பெற்றுள்ளது. அடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் கேமரா வசதி.

எல்ஜி பிராடா 3.0 ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முகப்பு கேமரா இதில் இல்லை. சாம்சங் நெக்சஸ் ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இனிய பொழுதுகளை இனிமையாக போக்க வேண்டும் என்றால் இந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆடியோ மற்றும் விடியோ பிளேயர் சவுகரியத்தினை பயன்படுத்தி கொள்ளலாம்.

எல்ஜி பிராடா 3.0 மற்றும் சாம்சங் நெக்சஸ் ஸ்மார்ட்போனில் சிறந்த டாக் டைம், ஸ்டான்-பை டைமினை வழங்க அதிக ஆற்றல் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எல்ஜி பிராடா 3.0 ஸ்மார்ட்போனில் எல்ஐ-அயான் 1,540

எம்ஏஎச் பேட்டரியும், சாம்சங் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனில் எல்ஐ-அயான் 1,750 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது.

இன்டர்னல் வசதி 8 ஜிபி வரை எல்ஜி பிராடா 3.0 ஸ்மார்ட்போனில் உள்ளது. கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனில் 16 ஜிபி வரை இன்டர்னல் வசதி உள்ளது. இதை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும். தொழில் நுட்பத்தில் பிரம்மிக்க வைக்கும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலையை பார்ப்போம். எல்ஜி பிராடா 3.0 ஸ்மார்ட்போன் ரூ.41,000 ஒட்டிய விலையில் கிடைக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி நெக்ஸல் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X