ஸ்டைலான வடிவமைப்பில் புதிய எல்ஜி பிரடா ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
ஸ்டைலான வடிவமைப்பில் புதிய எல்ஜி பிரடா ஸ்மார்ட்போன்!
சமீபத்தில் சிறப்பான தொழில் நுட்பத்தினை பிரடா 3.0 ஸ்மார்ட்போனில் கொடுத்து அனைவரையும் அசத்தியது. இதற்கு முன்பு எல்ஜி பிரடா-2.0 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனின் வசதிகள் என்ன என்பதை வாடிக்கையாளர்களின் பார்வை பதிவுக்காக இங்கே பார்க்கலாம்.

இந்த பிரடா-2.0 ஸ்மார்ட்போன் 3 இஞ்ச் தொடுதிரை வசதியுடன், கியூவர்டி கீப்பேட் வசதியையும் பெற்றுள்ளது. இதில் டிஎப்டி டபிள்யூகியூவிஜிஏ திரை தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. 5 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும் இந்த மொபைலில் 4 X டிஜிட்டல் சூம் வசதியினையும் பெறலாம்.

எல்ஜி படைப்பான பிரடா 2.0 மற்றும் பிரடா 3.0 என்ற 2 ஸ்மார்ட்போன்களுமே உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டது. மொபைலில் நெட் வசதி என்பது இப்பொழுது அத்தியாவசிய தேவையாகிவி்ட்டது. இதில் ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பகங்களை எளிதாக பயன்படுத்தலாம்.

இந்த ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டது என்பது இதன் வடிவமைப்பிலேயே நிச்சயம் தெரியும். மிகவும் நுட்பமாக இதன் தோற்றம் வடிமைக்கப்பட்டுள்ளது. முதல் பார்வையிலே வாடிக்கையாளர்களை தன் பக்கம் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது எல்ஜி பிரடா 2.0 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் ரூ.38,975 விலையில் கிடைக்கும். இதன் விலையை பார்த்து அதிகம் என்று நினைத்துவிட முடியாது. இந்த ஸ்மார்ட்போனின் விலை அதிகமாக இருக்கிறது என்றால் அந்தளவு தொழில் நுட்பம் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது என்று தாராளமாக கூறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்