ஸ்மார்ட்போன் பாதி...டேப்லட் பாதி...எல்ஜியின் புதிய பிரதிபலிப்பு!

By Super
|

ஸ்மார்ட்போன் பாதி...டேப்லட் பாதி...எல்ஜியின் புதிய பிரதிபலிப்பு!
ஆகஸ்டு மாதம் நிறைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளது போலும். எல்ஜி நிறுவனத்தின் ஆப்டிமஸ் வியூ-2 என்ற புதிய ஸ்மார்ட்போன் கூட வருகிற ஆகஸ்டு மாதம் அறிமுமாக உள்ளது.

ஜெர்மனியில் நடக்க இருக்கும் ஐஎஃப்ஏ மாநாட்டில் இந்த ஆப்டிமஸ் வியூ-2 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இதே ஐஎஃப்ஏ மாநாட்டில் தான் கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனும் அறிமுகமாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனும் உயர்ந்த தொழில் நுட்ப வசதியினை கொண்டதாக இருக்கும். இதனால் நிச்சயம் இந்த வியூ ஸ்மார்ட்போனின் புதிய தொழில் நுட்பம் பற்றிய எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிமாக இருக்கும்.

இப்போது வருகிற ஸ்மார்ட்போன்கள் எல்லாம் கிட்டதட்ட 5 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்டதாக இருக்கும். இதன் 5 இஞ்ச் திரை 1024×768 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும்.

எல்ஜி கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 எம்எஸ்எம் 8960 மொபைல் பிராசஸர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பாக சப்போர்ட் செய்யும் பிராசஸர் மட்டும் அல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டது.

அதாவது எல்ஜி நிறுவனத்தின் இந்த ஆப்டிமஸ் வியூ-2 ஸ்மார்ட்போன், ஃபேப்லட் என்று சொல்ல கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் என்று இரண்டு மின்னணு சாதனங்களிலும் உள்ள கூடுதல் தொழில் நுட்ப வசதியினையும் கொண்டதாக இருக்கும்.

ஆடுத்த ஆகஸ்டு மாதத்தில் கேலக்ஸி நோட்-2, எல்ஜி ஆப்டிமஸ் வியூ-2 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X