புதிதாக 5 ஆன்ட்ராய்டு போன்களை அறிமுகப்படுத்தும் எல்ஜி

இந்த நிலையில், மொபைல்போன் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் எல்ஜி நிறுவனம் விரைவில் புதிதாக 5 ஆன்ட்ராய்டு போன்களை அறிமுகப்படுத்துகிறது. இதில், நான்கு போன்கள் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் ஓஎஸ் கொண்டதாகவும், ஒரு போன் ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஓஎஸ் கொண்டதாகவும் வருகிறது.
எல்ஜி பிரதா கே-2:
இந்த போன் 4.3 தொடுதிரை கொண்டதாக வருகிறது. ஆற்றல்வாய்ந்த டியூவல் கோர் பிராசஸர் இதன் வேகத்துக்கு துணைகொடுக்கும். 3ஜி, வைஃபை ஆகிய வசதிகள் கொண்ட இந்த போன் வரும் நவம்பரில் மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்கிறது.
எல்ஜி விக்டர்:
எல்ஜியின் மற்றொரு புதிய ஆன்ட்ராய்டு போன். இது 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 5 மெகாபிக்செல் கேமரா மற்றும் இதர மல்டிமீடியா அம்சங்களும் வருகை தருகிறது. இதுவும், ஆன்ட்ராய்டு ஜி்ஞ்சர்பிரெட் ஓஎஸ் கொண்டது.
எல்ஜி யூனிவா:
இது 3.5 இஞ்ச் தொடுதிரை, 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர், 5 மெகாபிக்செல் கொண்டதாக வர இருக்கிறது. பிற ஸ்மார்ட்போன் அம்சங்களும் இதிலும் பொதுவாக இருக்கும்.
எல்ஜி கெலட்டோ:
இது விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற அம்சங்களுடன் அமெரி்க்காவில் முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர், 3 மெகாபிக்செல் கேமரா, என்எப்சி சிப் பொருத்தப்பட்டு வர உள்ளது. இதுவும் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் ஓஎஸ் கொண்டதாகவே வருகிறது.
எல்ஜி இ-2:
ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஓஎஸ் கொண்ட இந்த போன் சாதாரண ரகத்தை சேர்ந்தது. 3 மெகாபிக்செல் கேமரா உள்ளிட்ட மல்டிமீடியோ பொழுதுபோக்கு அம்சங்களுடன் மார்க்கெட்டில் நுழைய இருக்கிறது.
விலை உள்ளிட்ட விபரங்கள் போன்களை அறிமுகப்படுத்துவதற்கு சில நாட்கள் முன்பு வெளியிட எல்ஜி திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications