16கேமரா லென்ஸ் ஸ்மார்ட்போனை தயாரிக்கும் எல்ஜி நிறுவனம்.!

மேலும் பயனர்கள் தேர்வு செய்யும் லென்ஸ்கள் மட்டும் மிக அருமையாக பயன்படுத்த முடியும் என்றும், பின்பு இதனைபயனர்கள் எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்ய முடியும்.

|

எல்ஜி நிறுவனம் இப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இந்நிறுவனம் தயாரிக்கும் டிவி, ஸ்மார்ட்போன் போன்ற பல்வேறு பொருட்களில் புதிய தொழில்நுட்பங்கள்
அதிகமாக இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் வரை பின்புறம் நான்கு கேமரா மற்றும் 3கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது, இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறவனம் விரைவில் பின்புறம் 5கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனை தாயரிக்க திட்டமிட்டுள்ளது.

16பிரைமரி கேமரா:

16பிரைமரி கேமரா:

இந்நிலையில் எல்ஜி நிறுவனம் விரைவில் அறிமுகம் ஸ்மார்ட்போனில் பின்புறம் 16கேமரா லென்ஸ் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளது, பின்பு இதற்குவேண்டி புதிய காப்புரிமையை பெற்று இருக்கிறது எல்ஜி நிறுவனம்.

பின்புறம் மேட்ரிக்ஸ்

பின்புறம் மேட்ரிக்ஸ்

குறிப்பாக 16லென்ஸ்களும் ஸ்மார்ட்போனின் பின்புறம் மேட்ரிக்ஸ் வடிவில் பொருத்தப்பட் இருக்கிறது என்றும், இந்த லென்ஸ்கள்
வெவ்வேறு பரிணாமங்களை கொண்டுள்ளது என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லென்ஸ்கள்

லென்ஸ்கள்

மேலும் பயனர்கள் தேர்வு செய்யும் லென்ஸ்கள் மட்டும் மிக அருமையாக பயன்படுத்த முடியும் என்றும், பின்பு இதனை பயனர்கள் எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்ய முடியும்.

 டிஸ்பிளே

டிஸ்பிளே

இருந்தபோதிலும் எல்ஜி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றிய தகவல்களை வெளியிடவில்லை, மேலும் 16கேமரா லென்ஸ் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்பீக்கர் கிரில் பின்புறம் இடம்பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்த XBOOM WK9 AI ThinQ ஸ்மார்ட் டிஸ்பிளே அதிக வரவேற்பை பெற்றுள்ளது, பின்பு சிறந்த தொழில்நுட்ப வசதியுடனும் வந்துள்ளது.

 எல்ஜி XBOOM WK9 சாதனம்:

எல்ஜி XBOOM WK9 சாதனம்:

எல்ஜி XBOOM WK9 சாதனம் பொறுத்தவரை ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் வெளிவந்துள்ளது, எனவே நீங்கள் குரல் கொடுத்தால் போதும் ஆடியோ, வீடியோ என அனைத்தையும் இயக்க முடியும். குறிப்பாக செய்திகளை கூட இவற்றில் தெரிந்துகொள்ள முடியும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

எல்ஜி XBOOM WK9 சாதனத்தில் 8-இன்ச் எல்சிடி டிஸ்பிளே பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 1200 x 800 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எல்ஜி XBOOM WK9 சாதனம் இரண்டு 20-வாட் ஸ்பீக்கர், மெரிடியனின் பாஸ் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜி மூலம் இயக்கப்படுகிறது. ஒரு அறையில்
எங்கிருந்தும் இவற்றை இயக்க முடியும். பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் சிறந்த மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது

வைஃபை நெட்வொர்க்

வைஃபை நெட்வொர்க்

வைஃபை நெட்வொர்க் மற்றும் கூகுள் கணக்கு போன்றவற்றின் மூலம் இந்த சாதனத்தை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த
முடியும். பின்பு YouTube, YouTube TV, HBO, CBS, CW மற்றும் Wiki ஆகியவற்றிலிருந்து வீடியோக்களை
இயக்கலாம். Google Play Music, Spotify, YouTube Music, Pandora, TuneIn மற்றும் Deezer
போன்ற ஆடியோ சேவைகள் இந்த ஸ்மார்ட் டிஸ்ப்ளே மூலம் அணுகலாம். இந்த சாதனத்தின் முன்புறம் 5எம்பி கேமரா
பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு கூகுள் டூயோ வீடியோ கால் அழைப்புகள் போன்றவற்றிக்கு இவற்றை பயன்படுத்த முடியும். மேலும்
இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இந்த சாதனம்.

Best Mobiles in India

English summary
LG patent describes smartphone with 16 camera lenses: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X