Home
Mobile

டி-டிஎம்பி டிவி டியூனருடன் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!

By Super

டி-டிஎம்பி டிவி டியூனருடன் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!
ஸ்மார்ட்போன் என்றாலே சிறப்பான தொழில் நுட்பம், குறைந்த விலை, ஆன்ட்ராய்டு ஓஎஸ்... என்று வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த பட்டியலை பூர்த்தி செய்ய ஓர் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது எல்ஜி நிறுவனம்.

இந்த பி-936 என்ற இந்த எல்ஜி ஸ்மார்ட்போன் 4.5 இஞ்ச் என்று அசர வைக்கும் அளவுக்கு அகன்ற திரை கொண்டதாக வெளிவரும். இதனால் அதிகபட்சம் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும்.

மல்டி டச் வசதியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் ஆன்ட்ராய்டு 2.3.6 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் ஏஆர்எம்வி-7 சிபியூ பிராசஸர் மற்றும் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

8 மெகா பிக்ஸல் கேமரா, 1.3 மெகா பிக்ஸல் கேமரா என்று இரண்டு கேமராக்களில் கண்சிமிட்டி மகிழ்விக்கும் இந்த எல்ஜி பி-936 எல்டிஇ ஸ்மார்ட்போன். எஸ்எம்எஸ், இமெயில், சோஷியல் நெட்வொர்க் என்று இதன் வசதிகள் ஏராளம்.

8ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசிதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பதிற்கு இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும்.

ஸ்டான்டர்டு 1,830 எம்ஏஎச் பேட்டரி 7 மணி நேரம் டாக் டைம் மற்றும் 400 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும். இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் மொபைல் மார்கெட்டிற்கு ஒரு பெரிய ஹிட் கொடுக்கும். அதோடு இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X