டீஸர் வீடியோ தொழில் நுட்பத்தில் எல்ஜி ஆப்டிமஸ் வியூ ஸ்மார்ட்போன்!

இதில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட டீஸர் வீடியோ பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டீஸர் வீடியோவை பயன்படுத்தும் போது இதன் சிறந்த தொழில் நுட்பத்தினை நிச்சயம் உணர முடியும். ஆப்டிமஸ் வியூ ஸ்மார்ட்போன் 5 இஞ்ச் ஐபிஎஸ் தொடுதிரையை கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஸ்மார்ட்போன் மற்ற ஸ்மார்ட்போன்களையும் விட அதிகப்படியான வசதிகளையும் வழங்கும் என்று தாராளமாக சொல்லலாம்.
இதன் திரை 1024 X 768 பிக்ஸல் திரை துல்லித்தினை கொடுக்கும். இதன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சுலபமாக இயங்க 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வசதி கொண்ட கியூவள்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரை கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
8 மெகா பிக்ஸல் கேமரா, 8ஜிபி இன்டர்னல் மெமரி வசதி, என்எஃப்சி, போன்ற தொழில் நுட்ப வசதிகளை இந்த ஸ்மார்ட்போனின் மூலம் பெறலாம். ஆப்டிமஸ் வியூ ஸ்மார்ட்போன் வசதிகள் பற்றி அவ்வளவாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் கொடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஆப்டிமஸ் வியூ ஸ்மார்ட்போன் பற்றி அதிக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதை பற்றி தெளிவான தகவல்களை பெற இன்னும் சற்று காத்திருக்க வேண்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications