கேஸக்ஸி நோட் 2 போனை கதிகலங்க வைக்குமா எல்சி ஆப்டிமஸ் வியு 2?

Posted By: Karthikeyan
கேஸக்ஸி நோட் 2 போனை கதிகலங்க வைக்குமா எல்சி ஆப்டிமஸ் வியு 2?

எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எல்ஜி நிறுவனம் தனது புதிய ஆப்டிமஸ் வியு 2 என்ற ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த போன் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வருகிறது. மேலும் இந்த போன் சாம்சங் கேலக்ஸி நோட் 2க்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வியு2 போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் இயங்கு தளத்தில் வருகிறது. பார்ப்பதற்கு மிகவும் பக்காவாக இருக்கிறது. இதன் 5 இன்ச் எக்ஸ்ஜிஎ ஐபிஎஸ் 600 நிட்ஸ் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது.

அதோடு இந்த போன் டூவல் கோர் க்வல்காம் சினாப்ட்ராகன் எம்எஸ்எம்8960 ப்ராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டிருப்பதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும் என்று நம்பலாம்.

இந்த போன் 8எம்பி பின்பக்க கேமரா கொண்டிருப்பதால் இதில் 1080பி எச்டி வீடியோ பதிவை மிக அருமையாகச் செய்ய முடியும். அதோடு இதில் 1.3எம்பி முகப்பு கேமராவும் இருப்பதால் அட்டகாசமாக வீடியோ உரையாடலையும் நடத்த முடியும்.

இணைப்பு வசதிகளுக்காக இந்த போன் 16ஜிபி மற்றும் 32ஜிபி இஎம்எம்சி, எச்டிஎம்ஐ அவட், டிஎல்என்எ வசதி, வைபை, 4ஜி, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி, ஹெட்செட் ஜாக் போன்ற வசதிகளைத் தாங்கி வருகிறது. மேலும் இந்த போனில் ஏராளமான அப்ளிகேசன்களும் இருக்கின்றன.

குறிப்பாக குயிக் மெமோ அப், டேக்+ அப், இரண்டு என்எப்சி ஸ்டிக்கர், கூகுள் ப்ளே ஸ்டோரை அக்சஸ் செய்யும் வசதி போன்றவற்றையும் இந்த போன் கொண்டிருக்கிறது.

இந்த போனில் வயர்லஸ் மேக்னட்டிக் இன்டக்சன் சார்ஜிங் வசதியும் உள்ளது. கொரிய சந்தையில் இந்த போன் ரூ.45,000க்கு விற்கப்படுகிறது.

அதே நேரத்தில் கேலக்ஸி நோட் 2 ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வருகிறது. துல்லியமான 5.5 இன்ச் அளவில் சூப்பர் அமோலெட் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. மேலும் எக்ஸினோஸ் க்வாட் கோர் ப்ராசஸர் மற்றும் 2ஜிபி ரேமையும் கொண்டிருக்கிறது.

பின்பக்கம் 8எம்பி கேமராவையும், 1.9எம்பி முகப்புக் கேமராவையும் இந்த கேலக்ஸி வழங்குகிறது. மேலும் இந்த போனில் நியூ எஸ்பென், 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், மைக்ரோ யுஎஸ்பி, ப்ளூடூத், என்எப்சி ரேடியோ, வைபை, சாம்சங் ஹப்ஸ் போன்ற எல்லா வகையான இணைப்பு வசதிகளும் உள்ளன.

விலையைப் பார்த்தால் இந்த போன் ரூ.39,999க்கு கிடைக்கிறது. அதாவது வியு 2வைவிட விலை குறைவு. எனினும் இந்த இரண்டு போன்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்