எல்ஜி ஆப்டிமஸ் எஸ்ஒஎல் மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் - ஒரு ஒப்பீடு

Posted By: Staff

எல்ஜி ஆப்டிமஸ் எஸ்ஒஎல் மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் - ஒரு ஒப்பீடு
எல்ஜி மொபைல்கள் என்றாலே அதனுடைய செயல்திறனுக்கு நாம் காரண்டு கொடுக்கலாம். அந்த விதத்தில் எல்ஜி நிறுவனம் சிறந்த செயல்திறன் கொண்ட புதிய எல்ஜி ஆப்டிமஸ் எஸ்ஒஎல் இ730 மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் ஆகிய புதிய மொபைல்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

எல்ஜி ஆப்டிமஸ் எஸ்ஒஎல் இ730 அடிப்படையிலேயே இயக்குவதற்கு லகுவாக இருக்கிறது. இந்த மொபைல் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர் ப்ரான்டகளை கொண்டுள்ளது. செப்டம்பரில் இந்திய சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மொபைலின் பரப்பளவு 122.5 X 62.5 X 9.8 மில்லி மீட்டராகும். இதன் தொடுதிரை அல்ட்ரா எஎம்ஒஎல்இடி மற்றும் 16எம் வண்ண சப்போர்ட் பெற்றுள்ளது. மேலும் மல்டி டச் வசதியையும் வழங்குகிறது.

எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் மொபைலை எடுத்துக்கொண்டால் அது ஐபிஎஸ் எல்சிடி கப்பாஸிட்டிவ் தொடுதிரையுடன் 16எம் அளவு வண்ணங்களை சப்போர்ட் செய்யும் வசதியுடன் இருக்கிறது. இதன் திரையின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கொரில்லா கண்ணாடியை கொண்டு மிகவும் அழகாக இருக்கிறது. மேலும் அக்ஸ்லேர்மீட்டர், ப்ராக்ஸிமிட்டி ஸென்ஸர் மற்றும் கிரோ ஸென்ஸர் ஆகிய வசதிகளையும் இந்த மொபைல் கொண்டுள்ளது. நமது தொடுதல் மூலம் இதில் கட்டளை கொடுக்க முடியும். இந்த மொபைல் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

எல்ஜி ஆப்டிமஸ் எஸ்ஒஎல் இ730 க்வல்காம் எம்எஸ்எம்8255டுன் 1ஜிஹச்ஸட் திறன் கொண்ட ப்ராஸஸரை பெற்றிருக்கிறது. இது ஒரு ஆண்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சிப்ரீடு மொபைலாகும். மற்ற மொபைல்களில் இருக்கும் அனைத்து வசதிகளையும் இந்த மொபைல் தன்னிலே கொண்டிருக்கிறது. மேலும் இது ஆட்டோபோக்கஸ் மற்றும் ஜியோ டேக்கிங் மற்றும் எடிட்டிங்க வசதி கொண்ட 5எம்பி கேமராவையும் வழங்குகிறது.

எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் மொபைலை எடுத்துக்கொண்டால் அதுவும் மற்றும் முகம் புன்னகை டிடக்சன் போன்ற எடிட்டிங் வசதிகளைக் கொண்ட 8எம்பி கேமராவை வழங்குகிறது. விரைவாக ஆன்லைன் அப்ளிகேஷன்களை மற்றும் நெட்வொர்க் தளங்களை ப்ரவுஸ் செய்ய தேவையான வசதிகளை இரண்டு போன்களுமே வழங்குகின்றன. எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் இந்திய சந்தையில் ரூ. 24490க்கு விற்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot