புத்தம் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்கள்: ஓர் சிறிய ஒப்பீடு

By Super
|

புத்தம் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்கள்: ஓர் சிறிய ஒப்பீடு
இரண்டு ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட எல்ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைக்கு வருகை தந்திருக்கிறது. சோல் மற்றும் ஹப் என்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் தான் அவை. ஆப்டிமஸ் சோல் இ-730 ஸ்மார்ட்போன் 3.8 இஞ்ச் அல்ட்ரா அமோல்டு திரை வசதி கொண்டது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்தில் இயங்கும். எல்ஜி ஆப்டிமஸ் சோல் இ-730 ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் கொண்டது. ஆப்டிமஸ் ஹப் இ-510 ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் டிஎப்டி திரை வசதி கொண்டது. இதனால் ஹப் ஸ்மார்ட்போன் 480 x 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இது 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் பிராசஸரை கொண்டது.

எல்ஜி ஆப்டிமஸ் சோல் இ-730 ஸ்மார்ட்போன் டிஎன்எல்ஏ, எச்எஸ்டிபிஏ, ஜிபிஎஸ் போன்ற தொழில் நுட்பங்களையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போனில் உயர்ந்த தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளதால் எந்த தகவல்களையும் அதி வேகத்தில் டவுன்லோட் செய்யலாம்.

ஆப்டிமஸ் ஹப் ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் சூம், ஆட்டோஃபோக்கஸ், ஃபேஸ் அண்டு ஸ்மைல் டிடெக்ஷன் போன்ற சிறந்த தொழில் நுட்பங்களையும் இதன் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் பெற முடியும்.

ஹப் ஸ்மார்ட்போன் வீடியோ ரெக்ககார்டிங் வசதியை பொருத்த வரையில் 640 X 480 பிக்ஸல் துல்லியத்தில் நொடிக்கு 24 ஃபிரேம்களை வழங்கும். இதில் ஜிபிஆர்எஸ், எட்ஜ், 3ஜி, வைபை போன்ற தொழில் நுட்ப வசதிகளை சுலபமாக உபயோகிக்கலாம். இதில் உள்ள எஸ்என்எஸ் இன்டகிரேஷன் அப்டேட் வசதியினால் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றையும் பயன்படுத்த முடியும்.

எல்ஜி ஆப்டிமஸ் சோல் ஸ்மார்ட்போன் ரூ.19,000 விலையில் கிடைக்கும் என்று தகவல்கள் கூறியுள்ளன. எல்ஜி ஆப்டிமஸ் ஹப் ஸ்மார்ட்போனை ரூ.14,500 விலையில் இந்திய சந்தையில் பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X