விரைவில் புதிய ஆன்ட்ராய்டு போன்: எல்ஜி அறிமுகப்படுத்துகிறது

கூகுள் மேப் வியூவர், டாக்குமென்ட் எடிட், கான்வர்சேஷன் வியூவ் மெஸேஜிங் சிஸ்டம் மற்றும் மோஷன் சென்சார் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருக்கிறது. 3.2 மெகாபிக்செல் கேமரா துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை தரமாகவும், துல்லியமாகவும் வழங்கும்.
அடுத்தவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் இசையை கேட்டு மகிழ்வதற்கு ஏற்ற வகையில் ஹெட்போன் ஆடியோ ஜாக்கும் உண்டு. புதிய புளூடூத் வெர்ஷன், 3ஜி நெட்வோர்க் சப்போர்ட்டில் இன்டர்நெட்டில் புகுந்து விளையாடலாம். கம்ப்யூட்டருடன் இணைக்கும் வகையில் யுஎஸ்பி போர்ட்டும் இருக்கிறது.
ஆன்ட்ராய்டு 2.3 வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக வரும் இந்த போனில் யூ ட்யூப், சமூக வலைதளங்களுக்கு எளிதாக செல்லும் வசதி உள்ளிட்ட அனைத்தையும் பெறலாம்.
2.8 இஞ்ச் கொண்ட தொடுதிரை 240*320 பிக்செல் கொண்டுள்ளதால் அப்ளிகேஷன்களை துல்லியமாக பார்த்து இயக்க ஏதுவாக இருக்கும். 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர், 256 எம்பி ரேம் ஆகியவை ஆன்ட்ராய்டை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேகத்திற்கு தோள் கொடுக்கும்.
இது சேமிப்பு திறனில் குறைவைக்கும் என தெரிகிறது. ஆனால், 2ஜிபி வரை இதன் சேமிப்பு திறனை கூட்ட முடியும் என்பது ஆறுதல் தருகிறது. இந்த புதிய ஆன்ட்ராய்டு போன் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து இதுவரை எல்ஜி எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், இந்த போன் ரூ.12,000 விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications