அசத்தும் வடிவமைப்பில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்

Posted By: Staff

அசத்தும் வடிவமைப்பில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்

வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை கூட்டிக்கொள்ள மற்றுமொரு புதிய மொபைலை தனது படைப்புப் பட்டியலில் சேர்த்திருக்கிறது எல்ஜி நிறுவனம். இந்த புதிய மொபைல் எல்ஜி ஆப்டிமஸ் ப்ரோ சி-660 என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க இந்த மொபைல் புதிய போர்ட்ரெய்ட் டிஸ்ப்ளேவுடன் வந்துள்ளது. இதுவே உலகின் முதல் போர்ட்ரெய்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்மொபைல்.

இந்த மொபைலின் கம்பீரத்தையும், கலைநயத்தையும் இதன் கியூவர்டிக் கீப்பேட் இன்னும் அதிகமாக்குகிறது. கைக்கு கச்சிதமாக இருக்கும் வகையில் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

128 கிராம் இலகு எடை கொண்ட ஆப்டிமஸ் ப்ரோ சி-660 மொபைல் 2.8 இஞ்ச் கியூவிஜிஏ, 240 X 320 டிஎப்டி திரை துல்லியத்தையும் கொண்டுள்ளது.

இது தொட்டவுடன் பதில் அளிக்கும் தொடு திரை வசதி கொண்ட மொபைல்போன். பவர்ஃபுல் 800 எம்எச்இசட் பிராசஸர் இதில் பொருத்தப்பட்டுள்ளதால், மொபைல் வேகமாக இயங்கவும், நிறைய தொழில் நுட்பங்களைக் கொடுக்கவும் சப்போர்ட் செய்கிறது. இது ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் ப்ளாட்ஃபார்ம் இயங்குதளத்தின் மூலம் இயங்குகிறது.

இந்த மொபைல் அளிக்கும் ஸ்டான்பை டைம் மற்றும் டாக் டைம் நேரத்தை பார்த்தால் நிச்சயம் இதன் சிறப்பான தொழில் நுட்பம் புலப்படும். 1,500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டதால் 13.5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 852 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் சர்வ சாதாரனமாக கொடுக்கிறது.

அழகான புகைப்படங்களை, மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ள இதன் 3.15 மெகா பிக்ஸல் கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 640 X 480 பிக்ஸல் துல்லியத்தில் இதன் வீடியோவை பதிவு செய்து கொள்ள முடியும். அதோடு இதில் 4X டிஜிட்டல் சூம் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் மல்டி மீடியாவிற்கு சப்போர்ட் செய்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜேக், ஸ்டீரியோ இயர்போன், சுப்பீரியர் சவுன்டு க்வாலிட்டி போன்ற சவுகர்யங்களையும் எளிதில் பெற முடியும். சோஷியல் நெட்வொர்க் வசதியின் மூலம் இதில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றையும் பயன்படுத்தி மகிழலாம்.

ஜிபிஆர்எஸ், எட்ஜ், வைபை, பூளூடூத், யூஎஸ்பி போன்ற தொழில் நுட்பத்தைக் கொடுக்கும் இந்த மொபைல் 2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பத்தையும் வழங்குகிறது.

இதன் எக்ஸ்டர்னல் மெமரியை 32ஜிபி வரையில் விரிவுபடுத்திக் கொள்ளலாம். இந்த மொபைல் 2ஜிபி மைக்ரோஎஸ்டி கார்டையும் கொண்டுள்ளது.

இதன் எக்ஸ்டர்னல் மெமரியை 32ஜிபி வரையில் விரிவுபடுத்திக் கொள்ளலாம். இந்த மொபைல் 2ஜிபி மைக்ரோஎஸ்டி கார்டையும் கொண்டுள்ளது. அதிக தொழில் நுட்பத்தைக் கொடுக்கும் இந்த மொபைல் ரூ.10,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.

ஆனால் இதே வசதிகளை கொண்ட சில மொபைல்கள் இதைவிட அதிக விலையைக் கொண்டிருக்கிறது. அதன்படி பார்க்கும்போது இந்த எல்ஜி ஆப்டிமஸ் மொபைலின் விலை குறைவு என்று கூறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot