Home
Mobile

எல்ஜி ஸ்மார்ட்போன்களில் புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேடு வசதி

By Super
எல்ஜி ஸ்மார்ட்போன்களில் புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேடு வசதி
மொபைல் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எல்ஜி நிறுவனம் இதுவரை எண்ணிலடங்கா மொபைல்களையும், ஸ்மார்ட்போன்களை வழங்கியிருக்கிறது.

வாடிக்கையாளர் சேவையிலும் முன்னிலை வகிக்கும் எல்ஜி நிறுவனம் தற்போது, எல்ஜி ஆப்டிமஸ் மாடல் மொபைல்களில் ஜின்ஜர்பிரீட் இயங்குதளத்தை அப்கிரேட் செய்யும் வசதியினை துவங்கியுள்ளது.

ஆப்டிமஸ் ப்ளாக், எல்ஜி ஆப்டிமஸ் 3டி, எல்ஜி ஆப்டிமஸ் 2-எக்ஸ் போன்ற மொபைல்களில் இந்த ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆன்ட்ராய்டு 2.3 என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஆப்பரேட்டங் சிஸ்டத்தை அப்கிரேடு செய்து கொள்வதன் மூலம் ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு, அப்ளிகேஷன்களை வேகமாக இன்புட் செய்வது உள்ளிட்ட ஏராளமான தொழில் நுட்ப வசதியினைப் பெற முடியும்.

இந்த ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்யும் வசதியினை எல்ஜி ஆப்டிமஸ் 2-எக்ஸ் மொபைல் முதலில் பெற்றிருக்கிறது. தற்பொழுது இந்த ஓஎஸ் தொழில் நுட்பத்தை ஆப்டிமஸ் 2-எக்ஸ் மொபைலில் பெற முடியும்.

இந்த ஓஎஸ் தொழில் நுட்பத்தினை எல்ஜி ஆப்டிமஸ் 3டி மொபைலில் வரும் 21ந் தேதி, எல்ஜி ஆப்டிமஸ் ப்ளாக் மொபைலில் வரும் 28ந் தேதி அப்கிரேட் செய்யும் வசதியை எல்ஜி துவங்குகிறது.

ஆனால் மற்ற நாடுகளில் இந்த ஓஎஸ் தொழில் நுட்பத்தினை அப்கிரேட் செய்யும் தேதியும், மாதமும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X