Home
Mobile

எல்ஜி ஆப்டிமஸ் எம் மற்றும் ஆப்டிமஸ் எம்+ ஸ்மார்ட்போன்கள்: ஒப்பீடு

By Super

எல்ஜி ஆப்டிமஸ் எம் மற்றும் ஆப்டிமஸ் எம்+ ஸ்மார்ட்போன்கள்: ஒப்பீடு
மொபைல் சந்தையில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது எல்ஜி நிறுவனத்தின் ஆப்டிமஸ் சிரீஸ் ஸ்மார்ட்போன்கள். இந்த சிறந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள ஒரு புதிய ஆப்டிமஸ் சிரீஸ் ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது எல்ஜி நிறுவனம்.

ஆப்டிமஸ் எம் என்ற ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக எல்ஜி ஆப்டிமஸ் எம்+ ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது எல்ஜி. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் இயங்குதளம் கொண்டது. ஆன்ட்ராய்டு ஓஎஸ் இருந்தால் நிறைய தொழில் நுட்ப வசதிகளை பெறலாம் என்பது பல வாடிக்கையாளர்களின் கருத்து.

ஆப்டிமஸ் எம் ஸ்மார்ட்போன் 3.2 இஞ்ச் திரையை கொண்டது. இதைவிட புதிய வெர்ஷனான ஆப்டிமஸ் எம்+ ஸ்மார்ட்போன் சற்று பெரிய திரையை கொண்டுள்ளது. ஆப்டிமஸ் எம்+ ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரையை வழங்கும்.

கூகுள் சர்ச் ஆப்ஷன், ஜிமெயில் யூசேஜ், டாக்யுமெண்ட் வியூவர் கூகுள் டாக், யூடியூப் போன்ற ஏராளமான சவுதரியங்களை இந்த ஆப்டிமஸ் எம்+ ஸ்மார்ட்போனில் எளிதாக பயன்படுத்த முடியும். இதில் உள்ள மேப் ட்ரேஸ் வசதியின் மூலம், இருக்கும் இடத்தை பற்றிய விவரத்தினையும் தெளிவாக பெற முடியும்.

ஆப்டிமஸ் எம்+ ஸ்மார்ட்போனில் உள்ள ஆன்ட்ராய்டு இயங்குதளம் வேகமாக இயங்க இதில் உள்ள 800 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரும் சிறப்பாக உதவும். ஆனால் இதே ஆப்டிமஸ் எம் ஸ்மார்ட்போன் 600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டது.

புதிய வெர்ஷனான இந்த ஆப்டிமஸ் எம்+ ஸ்மார்ட்போன் கண்கவரும் வண்ணங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பம் தேவை என்று கருதும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆப்டிமஸ் எம்+ ஸ்மார்ட்போன் சிறந்ததாக இருக்கும். மேம்படுத்தப்பட்ட வெர்ஷனான இந்த ஆப்டிமஸ் எம்+ ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X