Home
Mobile

புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் எல்ஜி!

By Super

புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் எல்ஜி!
ஆப்டிமஸ் எல்டிஇ-II ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது எல்ஜி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்-3, எச்டிசி எக்ஸ் ஒன் போன்ற சூப்பர் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த போட்டியாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாஸ் மற்றும் மெட்டல் மூலம் வடிவமைக்கபட்ட இந்த ஆப்டிமஸ் எல்டிஇ-II ஸ்மார்ட்போன் அற்புதமான வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இந்த ஆப்டிமஸ் ஸ்மார்ட்போன் ட்ரூ எச்டி ஐபிஎஸ் திரையினை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.

இந்த திரையின் மூலம் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயங்குதளம் சிறப்பாக இயங்க, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதியினையும் இந்த

ஸ்மார்ட்போன் கொடுக்கும்.

உயர்ந்த துல்லியம் கொண்ட இநத ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் எளிதாக பெறலாம். பேட்டரியின் ஆற்றலை பொருத்த வரையிலும் 2,150 எம்ஏஎச் பேட்டரியினை இதில் பயன்படுத்த முடியும்.

தொழில் நுட்பங்களில் இருந்து, பேட்டரி வரை இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்-3 மற்றும் எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனிற்கு ஈடு கொடுக்கும் வகையில் தான் இருக்கும் என்று தாராளமாக சொல்லலாம்.

இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி பற்றி எல்ஜி நிறுவனம் இதுவரை எந்த செய்தியையும் வெளியிடவில்லை. கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரத்தினையும் எல்ஜி நிறுவனம் வெளியிடும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X