சத்தமில்லாமல் ஆப்டிமஸ் எல்9 ஸ்மார்ட்போனைக் களமிறக்கி இருக்கும் எல்ஜி

எல்ஜி நிறுவனம் இதுவரை பல சூப்பரான ஸ்மார்ட்போன்களைக் களமிறக்கி இருக்கிறது. அதுபோல் தற்போது கூகுளின் கூட்டணியில் உருவான நெக்சுஸ் 4 போனை விரைவில் இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. இதை இந்தியா வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ஆப்டிமஸ் எல்9 என்ற புதிய ஸ்மார்டபோனை சத்தமில்லாமல் களமிறக்கி இருக்கிறது எல்ஜி. ஏற்கனவே இந்த போனை ஆகஸ்ட் மாதம் பெர்லினில் நடைபெற்ற ஐஎப்எ 2012 எக்ஸ்போ கண்காட்சியில் எல்ஜி அறிமுகம் செய்து வைத்திருந்தது. அந்த போனை தற்போது எல்ஜி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது.
இந்த எல்ஜி9 போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த போன் 4.7 இன்ச் அளவில் கியூஎச்டி ஐபிஎஸ் கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரை சூப்பராகவும் மிகவும் துல்லியமாகவும் இருக்கும். மேலும் இந்த போன் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம் மற்றும் டூவல் கோர் 1ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் போன்றவற்றுடன் வருவதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கேமராவைப் பொருத்தவரை இந்த போனின் பின்புறம் ஒரு 5எம்பி கேமரா உள்ளது. அதுபோல் இதில் ஒரு முகப்புக் கேமராவும் உண்டு. இந்த கேமராவில் 1ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி மெமிரியும் உள்ளது. இந்த மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் ப்ளூடூத், பைவை, யுஎஸ்பி போன்றவை உள்ளன. மேலும் இதன் பேட்டரி இந்த போனிற்கு 11.5 மணி நேர இயங்கு நேரத்தையும் வழங்குகிறது. இந்த போன் ரூ.22,000க்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications