Home
Mobile

ஃபிலிப்கார்ட்டில் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் எல்ஜி!

ஃபிலிப்கார்ட்டில் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் எல்ஜி!

சர்வதேச மொபைல் கண்காட்சியில் ஆப்டிமஸ் எல்-5 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த எல்ஜி நிறுவனம், கடந்த ஜூன் மாதம் இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் வசதி கொண்டதாக இருக்கும் என்று அறிவித்தது.

அதோடு இந்த ஸ்மார்ட்போன் எளிதாக பணபரிவர்த்தனை செய்ய என்எப்சி தொழில் நுட்பத்துடன் சிறப்பாக உதவும் என்ற தகவலும் வெளியானது. இப்போது இந்த ஆப்டிமஸ் எல்-5 டியூவல் ஸ்மார்ட்போனை ஆன்லைன் வலைத்தளங்களில் எளிதாக பெறலாம்.

ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன என்பதன் தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் இதன் விலை பற்றி பார்க்கும் முன்பு இதன் தொழில் நுட்ப விவரங்களை மோலோட்டமாக பார்க்கலாம்.

டியூவல் சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையில் கம்பீரம் காட்டி மிரட்டுகிறது. இதில் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற்று பயனடையலாம். அழகாக தொழில் நுட்ப வசதிகளை இதன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் மூலம் வழங்கும் இந்த ஸ்மார்ட்போன், 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதியினையும் கொடுக்கும்.

இதில் 4ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை பெறலாம். வைபை வசதியை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 1,500 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் சிறப்பான ஆற்றலையும் கொடுக்கும். 3ஜி நெட்வொர்க்கிற்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியை சிறப்பாக கொடுக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும். இத்தனை வசதிகளை கொண்ட இந்த எல்ஜி ஆப்டிமஸ் எல்-5 டியூவல் ஸ்மார்ட்போன் ரூ. 13,499 விலையில் ஃபிலிப்கார்ட் வலைத்தளத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X