Home
Mobile

எல்ஜி ஆப்டிமஸ் ஹப் மற்றும் எச்டிசி விவிட் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு

By Super

எல்ஜி ஆப்டிமஸ் ஹப் மற்றும் எச்டிசி விவிட் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு
ஸ்மார்ட்போன் உலகில் மக்களின் பேராதரவு பெற்ற மொபைல்கள் என்று இரண்டு மொபைல்களை தாராளமாக சொல்லலாம்.

என்னவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.

மிக எளிதாக எல்லோர் மனதிலும் நிழலாடும் எல்ஜி ஆப்டிமஸ் ஹப் மற்றும் எச்டிசி விவிட் என்ற மொபைல்கள் தான் அந்த இரண்டு ஸ்மார்ட் மொபைல்களும்.

இந்த இரண்டு மொபைல்களுமே தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன். இந்த எல்ஜி ஆப்டிமஸ் ஹப் மொபைல் 123 கிராம் எடை கொண்டது.

ஆனால் எச்டிசி விவிட் மொபைல் 177 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. ஆப்டிமஸ் ஹப் மொபைலை விட சற்று கூடுதல் எடை கொண்டதாக இருக்கிறது.

எச்டிசி விவிட் மொபைல் கறுப்பு மற்றும் வெள்ளை என்று இருவேறு நிறத்தில் கிடைக்கும். ஆனால் ஆப்டிமஸ் ஹப் மொபைல கறுப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் இந்த இரண்டு மொபைல்களும் வெளியில் உள்ள நிறத்தில் வேறுபட்டாலும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஒரே தொழில் நுட்பத்தை கொடுக்கும் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் 2.3 வெர்ஷன் கொண்ட மொபைல்களாக இருக்கின்றன.

எல்ஜி ஆப்டிமஸ் ஹப் மொபைல்போன் 3.5 இஞ்ச் திரை வசதி கொண்டது. எச்டிசி மொபைல், எல்ஜி மொபைலை காட்டிலும் சற்று அகன்ற அளவு கொண்ட 4.5 இஞ்ச் திரையை வழங்குகிறது.

எல்ஜி மொபைலில் உள்ள 5 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவின் மூலம் ஒரு நொடிக்கு 18 ஃபிரேம்களை சர்வ சாதாரணமாக எடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.

எச்டிசி விவிட் மொபைல் ஒன்று அதற்கு சளைத்தது இல்லை என்பது போல, இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. ஒன்று 8 மெகா பிக்ஸல் கேமரா, மற்றொன்று 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டுள்ளது.

கேட்பவர்கள் நிச்சயம் அசந்து போகத்தான் வேண்டும். எச்டிசி விவிட் மொபைலின் 8 மெகா பிக்ஸல் கேமரா 1080பி துல்லியம் கொண்டதால் ஒரு நொடிக்கு 30 ஃபிரேம்களை எடுக்கும் திறன் வாய்ந்தது.

கேமரா விஷயத்தில் எல்ஜி ஆப்டிமஸ் ஹப் மொபைலை காட்டிலும், எச்டிசி மொபைல் பல படிகள் முன் நிற்கின்றது.

ஆப்டிமஸ் ஹப் மொபைல் சிங்கிள் கோர் 800 எம்எச்இசட் ஏஆர்எம் வி-6 பிராசஸரை கொண்டு இயங்குகிறது. அதோடு அட்ரினோ 200 கிராஃபிக்ஸ் பிராசஸரையும் கொண்டுள்ளது.

எச்டிசி ஹப் மொபைல் ஆற்றல் வாய்ந்த 1,200 எம்ஏஎச் டியூவல் கோர் க்யூவல்காம் ஏபிக்யூ 8060 பிராசஸரை வழங்குகிறது.

இந்த இரண்டு மொபைல்களிலும் ஸ்டோரேஜ் மெமரியை 32ஜிபி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எல்ஜி ஆப்டிமஸ் ஹப் மொபைலில் 1,500 எம்ஏஎச் லித்தியம்-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

அதே எச்டிசி விவிட் மொபைலில் 1,620 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 4.60 மணி நேரம் டாக் டைமையும், 293 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் வழங்குகிறது.

எல்ஜி ஆப்டிமஸ் மொபைலின் ரூ.13,000 ஒட்டிய விலையில் கிடைக்கும். இதே விலையை தான் எச்டிசி விவிட் மொபைலும் கொண்டிருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X